ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டம் : இலங்கைக்கு மற்றொரு இலகுவான வெற்றி

Published By: Vishnu

12 Jun, 2023 | 07:43 PM
image

(நெவில் அன்தனி)

தென் கொரியாவின் ஜியொஞ்சி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 12ஆவது ஆசிய இளையோர் (21 வயதின்கீழ்) வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை தனது 2ஆவது இலகுவான வெற்றியை ஈட்டியது.

புருணைக்கு எதிராக திங்கட்கிழமை (12) காலை நடைபெற்ற பி குழு போட்டியில் 82 - 16 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை இலகுவாக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கான வாய்ப்பை இலங்கை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

தென் கொரியாவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் போன்றே புருணையுடனான போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியிலும் அணித் தலைவி சஜினி ரத்நாயக்க, தில்மி விஜேநாயக்க ஆகிய இருவரும் 30 கோல்களுக்கு மேல் போட்டு இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினர்.

போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை 19 - 6 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்தது. 2ஆவது ஆட்ட நேர பகுதியில் திறமையாக விளையாடிய இலங்கை அப் பகுதியையும் 22 - 3 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக்கொண்டது.

இதற்கு அமைய இடைவேளையின்போது 41 - 9 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை, 3ஆவது ஆட்ட நேரப் பகுதியை 20 - 3 என்ற கோல்கள் கணக்கிலும் கடைசி ஆட்ட நேரப் பகுதியை 21 - 4 என்ற கோல்கள் கணக்கிலும் தனதாக்கி 82 - 16 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

இலங்கை சார்பாக சஜினி ரத்நாயக்க 41 முயற்சிகளில் 33 கோல்களையும் தில்மி விஜேநாயக்க 36 முயற்சிகளில் 30 கோல்களையும் பாஷி உடகெதர 17 முயற்சிகளில் 16 கோல்களையும் புகுத்தினர். ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் களம் இறக்கப்பட்ட மினங்கி கங்கானம்கே 7 முயற்சிகளில் 3 கோல்களைப் புகுத்தினார்.

இலங்கையின் கோல்நிலை வீராங்கனைகள் மிகவும் நேர்த்தியாக கோல்களைப் போட்டிருந்தால் அதன் மொத்த கோல் எண்ணிக்கை 100 ஐக் கடந்திருக்கும்.

இலங்கைக்கு கடினமான போட்டி

ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 3 தடவைகள் சம்பியனான இலங்கைக்கு சிங்கப்பூருடனான 3ஆவது போட்டி மிகவும் கடினமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முக்கிய போட்டி செவ்வாய்க்கிழமை (13) நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிவரை முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

எவ்வாறாயினும் தென் கொரியா, புருணை ஆகிய அணிகளுடனான போட்டிகளில் போன்று இலங்கையின் கோல் நிலை எதிர்த்தாடும் மற்றும் கோல் போடும் வீராங்கனைகள் இலக்குகளைத் தவறவிடாமல் விளையாடுவது அவசியமாகும். ஏனெனில், கோல்களைத் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எதிரணிக்கு இரட்டிப்பு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். 

இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் சைனீஸ் தாய்ப்பேயை புதன்கிழமை (14) எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்போடியாவை வெற்றிகொள்ளும் கங்கணத்துடன் களம் இறங்கும்...

2024-09-09 20:19:08
news-image

லஹிரு குமார, பெத்தும் நிஸ்ஸன்க அபாரம்;...

2024-09-09 18:03:44
news-image

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை...

2024-09-09 12:35:16
news-image

உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற...

2024-09-09 12:04:37
news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள்...

2024-09-08 23:56:35
news-image

அமெரிக்க பகிரங்க மகளிர் ஒற்றையர் சம்பியன்...

2024-09-08 21:55:24
news-image

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின்...

2024-09-08 06:54:56
news-image

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன்...

2024-09-07 23:02:17
news-image

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட்...

2024-09-06 23:50:06
news-image

மகாஜனாவுக்கும் ஸ்கந்தவரோதயவுக்கும் இடையிலான 22ஆவது வருடாந்த...

2024-09-06 19:46:33
news-image

வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா...

2024-09-06 18:27:27
news-image

பெண்களுக்கான பராலிம்பிக் நீளம் பாய்தலில் இலங்கையின்...

2024-09-06 16:39:22