(நெவில் அன்தனி)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற வண்டா டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் கென்ய வீராங்கனை ஃபெய்த் கிப்யெகொன், எதியோப்பிய வீரர் லமெச்சா கிர்மா ஆகிய இருவரும் உலக சாதனைகளை முறியடித்து பாராட்டைப் பெற்றனர்.
ஃபெய்த் கிப்யெகொன், பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் லமெச்சா கிர்மா, ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியிலும் உலக சாதனைகளை முறியடித்தனர்.
இந்த இரண்டு சாதனைகளும் உலக மெய்வல்லுநர் வரலாற்றில் மிகச் சிறந்த சாதனைகளாக பதிவாகியுள்ளன.
ப்ளொரென்ஸில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சாதனை நிலைநாட்டிய கிப்யெகொன், 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள், 05.20 செக்கன்களில் நிறைவு செய்து மற்றொரு உலக சாதனையை நிலைநாட்டினார்.
இப் போட்டிக்கு முன்பதாக உலக மற்றும் ஒலிம்பிக் சம்பியன் கிப்யெகொன் 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் பங்குபற்றியது இது மூன்றாவது தடவையாகும். அத்துடன் கடந்த 8 வருடங்களில் 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்.
இதன் காரணமாக 29 வயதான கிப்யெகொனின் இந்த சாதனை வரலாற்று ஏடுகளில் அதிசிறந்த சாதனையாக பதியப்படவுள்ளது.
5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இதற்கு முன்னர் உலக சாதனையை நிலைநாட்டிய எதியோப்பிய வீராங்கனை லெட்டெசென்பெட் கிடே 2ஆம் இடத்தை (14:06.62) பெற்றார்.
3000 தடைதாண்டி ஓட்டத்தில் கிர்மா உலக சாதனை
ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் எதியோப்பிய வீரர் லமெச்சா கிர்மா உலக சாதனை நிலைநாட்டினார்.
அப் போட்டியை 7 நிமிடங்கள், 52.11 செக்கன்களில் நிறைவு செய்து கிர்மா உலக சாதனை நிலைநாட்டினார்.
19 வருடங்களுக்கு முன்னர் சய்த் சயீட் ஷஹீன் என்பவரால் நிலைநாட்டப்பட்ட உலக சாதனையையே (7:53.63) கிர்மா முறியடித்தார்.
கென்யா சார்பாக 2003வரை போட்டியிட்ட சய்த் சயீட் ஷஹீன், பின்னர் கத்தார் பிரஜையாக போட்டிகளில் பங்குபற்றி வந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM