மஹிந்தவின் அரசியல் ஆளுமை கோட்டாவிடம் இல்லை - ரோஹித அபேகுணவர்தன

Published By: Vishnu

12 Jun, 2023 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்திருந்தால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் நிலைத்திருந்திருக்கும்.

பொதுஜன பெரமுனவை புறக்கணித்து இனிவரும் காலங்களில் எவராலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அளுத்கம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது

 பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.மக்களின் எதிர்பார்த்தை எம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

நிறைவேற்றுத்துறையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட முடியாது.அரச தலைவர் எடுத்த ஒருசில தீர்மானங்கள் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமை கோட்டபய ராஜபக்ஷவிற்கு இருந்திருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் இன்றும் ஆட்சியில் இருந்திருக்கும்.பொருளாதார பாதிப்பு பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதிக்கு இறங்கி  போராடினார்கள் .மக்கள் போராட்டத்தை குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.இதன் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்பட ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.பொதுஜன பெரமுன அரசியலில் என்றும் இரண்டாம் பட்சமாகாது.

எமது ஆதரவு இல்லாமல் இனிவரும் காலங்களில் எவருக்கும் அரசாங்கத்தை அமைக்கவும் முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36