பாடசாலைகள் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளை படாசாலைகளுக்கு அனுப்பும்போது, டெங்கு நோய் பரவல் தொடர்பில் பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் 67 பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் (ஞாயிற்றுக்கிழமை 11ஆம் திகதி வரை) 42,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அக்காலப் பகுதியில் 25 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சத வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2022) நாடு முழுவதும் 76,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், அந்த ஆண்டில் 72 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM