அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார்.