பாரிஸில் 3 ஆவது பட்டத்துடன் 23 ஆவது மாபெரும் டென்னிஸ் பட்டத்தை சுவீகரித்து ஜோகோவிச் சாதனை

Published By: Vishnu

12 Jun, 2023 | 01:28 PM
image

(நெவில் அன்தனி)

அனைத்துக் காலத்திலும் தானே அதிசிறந்த டென்னிஸ் வீரர் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கு இல்லை என சாதனைமிகு 23ஆவது மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டத்தை  வென்றெடுத்த சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார்.

ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நோர்வே வீரர் கெஸ்பர் ரூடை 3 நேர் செட்களில் வெற்றிகொண்டு ஜோகோவிச் சம்பியனானார்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் வென்றெடுத்த 3ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும். அதேவேளை, தொழில்முறை டென்னிஸ் அல்லது பகிரங்க சகாப்தம் அறிமுகமான பின்னர் ஆண்களுக்கான மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் ஸ்பெய்ன் வீரர் ரபாயல் நடாலின் 22 வெற்றிகள் என்ற சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மாபெரும் டென்னிஸ் வரலாற்றில் செரினா வில்லியம்ஸின் 23 மாபெரும் டென்னிஸ் வெற்றிகள் என்ற சாதனையை ஜோகோவிச் சமப்படுத்தியுள்ளார்.

அத்துடன் சர்வதேச டென்னிஸ் மற்றும் தொழில்முறை ஆகிய ஒட்டுமொத்த டென்னிஸ் வரலாற்றில் அதிகூடிய 24 சம்பியன் பட்டங்களை வென்றெடுத்துள்ள அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரட் கோர்ட்டின் சாதனையை விம்பிள்டனில் ஜோகோவிச் சமப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், டென்னிஸில் யார் வல்லவர் என்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட விரும்பவில்லை என பாரிஸில் ஈட்டிய வெற்றியின் பின்னர் ஜோகோவிச் கூறினார்.

'இத்தகைய கலந்துரையாடல்களில் நான் ஈடுபட விரும்பவில்லை. நான் எனது சொந்த வரலாற்றுச் சாதனைகளை நிறைவேற்றிவருகிறேன்' என 36 வயதான ஜோகோவிச் கூறினார்.

'நான்தான் மிகச் சிறந்த வீரர் என்று சொல்ல விரும்பவில்லை. அது குறித்த கலந்துரையாடல்களை வேறொருவரிடம் விட்டு விடுகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

பகிரங்க அல்லது மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக யார் முதன்மையானவர் என்ற போட்டி ரபாயல் நடால், ரொஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோரிடையே நிலவி வந்தது.

பெடரர் 20 மாபெரும் டென்னிஸ் பட்டங்களுடன் கடந்த வருடம் ஓய்வு பெற்றார். ரபாயல் நடால் 22 வெற்றிகளுடன் தோடர்ந்தும் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக உபாதை காரணமாக பிரதான போட்டி எதிலும் அவர் பங்குபற்றவில்லை. நடால் அடுத்த வருடம் ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸில் கெஸ்பர் ரூடை வெற்றிகொண்டதை அடுத்து ஜோகோவிச் ஆடவருக்கான மாபெரும் டென்னிஸ் வரலாற்றில் 23 சம்பியன் பட்டங்களுடன் முதல் நிலையை அடைந்துள்ளார்.

ஆனால், ரூடுடனான இறுதிப் போட்டி ஜோகோவிச்சுக்கு இலகுவாக அமைய வில்லை. முதலாம், மூன்றாம் செட்களில் கடும் சவாலுக்கு மத்தியிலேயே ஜோகொவிச் வெற்றிபெற்றார்.

முதல் செட்டில் ரூடிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஜோகோவிச் சமநிலை முறிப்பு முறையில் 7 - 6 (7 - 1) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார்.

2ஆவது செட்டில் திறமையாக விளையாடிய ஜோகோவிச் அந்த செட்டை 6 - 3 என இலகுவாக வென்றெடுத்து 2 - 0 என்ற செட்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தார்.

மூன்றாவது செட்டில் தடுமாற்றம் அடைந்த ஜோகோவிச் கடைசிக் கட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி 7 - 5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பயினானார்.

இந்த வெற்றியுடன் குறைந்தது மூன்று தடவைகள் நான்கு மாபெரும் டென்னிஸ் போட்டிகளிலும் சம்பியனான முதலாவது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை 10 தடவைகளும் (2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 20220, 2021, 2023), பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை 3 தடவைகளும் (2016, 2021, 2023), விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்  பட்டத்தை   7 தடவைகளும் (2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022), ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை 3 தடவைகளும் (2011, 2015, 2018) ஜோகோவிச் வென்றெடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17