(நெவில் அன்தனி)
தென் கொரியாவின் ஜியொஞ்சு விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 12ஆவது ஆசிய இளையோர் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் அமோக வெற்றியீட்யது.
வரவேற்பு நாடான தென் கொரியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற பி குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் சஜினி ரத்நாயக்க தலைமையிலான இலங்கை 94 - 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இடைவேளையின்போது இலங்கை 49 - 6 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இப் போட்டியில் ஆரம்பம் முதல் கடைசிவரை ஆதிக்கம் செலுத்திய இலங்கை சார்பாக அணித் தலைவர் சஜினி ரத்நாயக்க 32 கோல்களையும் பாஷி உடகெதர 30 கோல்களையும் போட்டு அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.
ஆட்டத்தின் முதலாவது 10 நிமிட ஆட்ட நேரப் பகுதியில் 25 - 3 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்தது. 2ஆவது ஆட்ட நேரப் பகுதியையும் 24 - 3 என தனதாக்கிய இலங்கை இடைவெளையின்போது 49 - 6 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் மிகத் திறமையாகவும் வேகமாகவும் விளையாடிய இலங்கை, 3ஆவது ஆட்ட நேரப் பகுதியையும் 19 - 2 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக்கொண்டது.
கடைசி ஆட்ட நேர பகுதியில் முழு ஆதிக்கம் செலுத்திய இலங்கை அப் பகுதியையும் 26 - 0 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 94 - 8 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அப் போட்டியில் சஜினி, பாஷி ஆகியோரைவிட டில்மி கமகே 17 கோல்களையும் மினங்கி கங்கானம்கே 15 கோல்களையும் போட்டனர்.
தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை குழாத்தில் இடம்பெறும் 12 வீராங்கனைகளும் விளையாடியமை விசேட அம்சமாகும்.
சஜினி ரத்நாயக்க (தலைவி), நெத்மி விஜேநாயக்க (உதவித் தலைவி), இந்துஷா பெரேரா, நீஷா ஷலனி, சாரா பீரிஸ், பாஷி உடகெதர, தில்மி விஜேநாயக்க, மினங்கி கங்கானம்கே, டில்மி கமகே, நெதங்கா குணரத்ன, பினாலி பாலசூரிய, ரனிது பெரேரா ஆகிய அனைவருக்கும் இப் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இலங்கை தனது இரண்டாவது போட்டியில் சிங்கப்பூரை திங்கட்கிழமை எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM