ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றால் மூன்று கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

 ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒரு பிரிவினர் இன்றும் 8வது நாளாக தொடர்கின்றனர். இவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிடவேண்டும் என்றால் 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிட தயார் என்று தெரிவித்துள்ளார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கத்துக்கான நிரந்தர சட்ட நகலை உரிய அங்கீகார முத்திரையுடன் வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை தெரிவித்திருக்கிறார்கள்.