எம்முடைய பிள்ளைகளை பாடசாலைக்கு படிக்க அனுப்புவது அவர்களின் திறமையைப் பற்றி அறிந்துகொள்ளவும். பாடங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அதனைத்தொடர்ந்துதேர்வில்அதிகமதிப்பெண்கள் பெற்று சித்தியெய்தவேண்டும் என்றெல்லாம் எண்ணி அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிறார்களா..? இல்லையா? என்பது குறித்து மாணவர்களின் நலம் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவர்களிடம் கேட்டோம்.

‘மனிதனுக்கு மொத்தம் இருநூற்றி முப்பதுக்கும் அதிகமான நினைவாற்றல்கள் இருப்பதாகஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதில் தசைகளின் இயக்கத்தினால் ஏற்படும் நினைவாற்றல் (Muscle memory) ஆயுள் முழுக்க மறக்காது. இதை விளக்க வேண்டும் என்றால், நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிப்பது போன்றவை இந்தவகை தான். ஒருமுறை கற்றுக்கொண்டால் பிறகு மறக்காது. அதேபோல பிள்ளைகள் பாடசாலைகளில் தானாக செய்து கற்கும் செயல்பாடுகள் (Activities),  பரிசோதனைகள் (Experiments) போன்றவற்றில் ஐம்புலனும் ஒன்றி சந்தோஷமாக செய்வதால் கற்றல் கசக்காமல் கற்கண்டாய் இனிக்கும். தசைகளின் இயக்கத்தினால் ஏற்படும் நினைவாற்றல் போலவே உணர்வுரீதியான நினைவாற்றலும் மிகவும் முக்கியம்.

உடனே ஒரு பெற்றோர் அப்படியென்றால்..? என கேட்பார். இதற்கான பதில் என்னவெனில், ‘நம் மூளையின் அடிப்பகுதியில் பாதாம் பருப்புபோல சிறியதாக இருக்கும் அமீக்தலா (Amygdala) தான் நம் உணர்வுரீதியான நினைவாற்றலுக்கு காரணம். அமீக்தலாவை தூண்டிவிடும் விதத்தில் உற்சாகமாக வகுப்பெடுத்தால் கற்றல் கற்பித்தல் இரண்டுமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். அப்போது கற்கும் பாடமும் மறந்து போகாமல் நினைவில் நன்கு பதியும். மாணவர்களும் நன்கு கற்று சித்தியெய்துவர்.

டொக்டர் அறிவொளி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்