பாகிஸ்தானின் முன்மொழிவை இந்தியா ஏற்றுக்கொண்டதாம் ; பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசிய கிண்ணம்

Published By: Vishnu

11 Jun, 2023 | 04:54 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்பாக பாகிஸ்தான் கொண்டிருந்த நிலைப்பாடு வெற்றி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்மொழிந்த இரண்டு நாடுகளில் என்ற திட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதனுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம் டோன் நியூஸுக்கு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் யோசனைக்கு அமைய முதுல் நான்கு போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படும். அதன் பின்னர் நடுநிலையான மைதானத்தில் தொடரும் போட்டிகளில் இந்தியா பங்குபற்றும் என அந்த வட்டாம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைய பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்படலாம் என கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

செப்பெடம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தனது அணியை பாகிஸ்தான் அனுப்புவதற்கு இந்தியா மறுத்திருந்தது.

இதனை அடுத்தே இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற முன்மொழிவை பாகிஸ்தான் முன்வைத்தது.

இது இவ்வாறிருக்க, முழு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியையும் பாகிஸ்தானுக்கு வெளியே மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆர்வமாக இருந்தது. இதனை முன்னிட்டு ஆசிய கிரிக்கெட் பேரவை உறுப்பு நாடுகளை கட்டாயப்படுத்துவதிலும் இந்தியா முயற்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிய கிண்ணத்தை இடம் மாற்றினால் அதனை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கூறியதுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற நெரிடும் எனவும் சூட்சுமமாக எச்சரித்திருந்தது.

இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டியில் தமது அணி பங்குபற்றும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கிய உறுதிமொழிக்கும் ஆசிய கிண்ண முன்மொழிவைஇந்தியா ஏற்றுக்கொண்டதற்கும் தொடர்பு இல்லை என டோன் நியூஸுக்கு  அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால்,நடுநிலையான மைதானத்தில் அல்லது இந்தியாவில்கூட  உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு அண்மையில் விஜயம் செய்த சர்வதேச கிரிக்கெட் பேரவை பிரதிநிதிகள் அங்கு நடத்திய பேச்சவார்த்தையை அடுத்தே பாகிஸ்தானின் யோசனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விஜயத்தின்போது உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தே கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

'ஐசிசி பிரதிநிநிதிகளின் விஜயம் சாதகமான முடிவுக்கு வழிவகுத்துள்ளது' என அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது.

'பாகிஸ்தானின் இரண்டு நாடுகளில் ஆசிய கிண்ணம் என்ற யோசனையை ஏற்குமாறு இந்தியாவை ஐசிசி வலியுறுத்தியது. ஏனெனில் இதே முறைமை உலகக் கிண்ணத்துக்கும் பயன்படுத்தப்படலாம்' எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தது.

எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஆசிய கிரிக்கெட் பேரவை இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் வெளியிடவில்லை.

ஆறு நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் ஒரு குழுவிலும் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19
news-image

சாத்தியமான நான்கு உலகக் கிண்ண இறுதிப்...

2026-07-14 20:47:02
news-image

லங்கா பிறீமியர் லீக் 2026 போட்டிகளை...

2026-07-14 13:40:15
news-image

செவிப்புலன் குறைபாடுடையோருக்கான T20 தொடர்: இலங்கையை...

2026-07-14 05:10:23
news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37