(நெவில் அன்தனி)
இன்டர் மிலான் கழகத்துக்கு எதிராக இஸ்தன்புல், அட்டாடேர்க் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மென்செஸ்டர் சிட்டி கழகம், சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தையும் சுவீகரித்துக்கொண்டது.
போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ரொட்றி என்றழைக்கப்படும் ரொட்றிகோ ஹேர்னண்டெஸ் கஸ்கென்டே போட்ட கோல் மென்செஸ்டர் சிட்டி கழகத்தின் வெற்றிகோலாக அமைந்தது.
ஏற்கனவே பிறீமியர் லீக், எவ்.ஏ. கிண்ணம் ஆகிய போட்டிகளில் சம்பியனாகியிருந்த மென்செஸ்டர் சிட்டி கழகம், இந்த வருடம் வென்றெடுத்த மூன்றாவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
1999இல் மென்செஸ்டர் யுனைட்டட் கழகம் மூன்று பிரதான சம்பியன் பட்டங்களை சூடிய பின்னர் மூன்று சம்பியன் பட்டங்களை ஒரே வருடத்தில் வென்றெடுத்த 2ஆவது ஆங்கிலேயே கழகம் என்ற பெருமையை மென்செஸ்டர் சிட்டி கழகம் பெற்றுக்கொண்டது.
இன்டர் மிலான் கழகத்துக்கு எதிரான லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி கழகம் முழு அளவில் திறமையை வெளிப்படுத்தவில்லை.
கழகத்தின் நட்சத்திர வீரர் கெவின் டி ப்றயன் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் உபாதைக்குள்ளாகி களம் விட்டு வெளியேறியது, மென்செஸ்டர் சிட்டி கழகத்துக்கு பெரும் நெருக்கடியை கொடுப்பதாக அமைந்தது.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடிய இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் 68ஆவது நிமிடத்தில் மெனுவல் அக்கஞ்சி பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட பெர்னார்டோ சில்வா, பெனல்டி எல்லையின் மத்திய பகுதியை நோக்கி நகர்த்தினார்.
அந்த சந்தர்ப்பத்தில் தடுப்பாட்ட வீரர்களால் சூழப்படாமல் தனித்திருந்த ரொட்றி, 16 யார் தூரத்திலிருந்து பந்தை கோலினுள் புகுத்தி மென்செஸ்டர் சிட்டி கழகத்தை முன்னிலையில் இட்டார். அந்த கோலே பின்னர் சம்பியனை தீர்மானிக்கும் கோலாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்டர் மிலான் கழகம் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு எடுத்த சில முயற்சிகள் தவறிப்போயின.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய மென்செஸ்டர் சிட்டி கழகம், எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்தபோதிலும் கோல் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM