எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு ஆதரவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Published By: Rajeeban

11 Jun, 2023 | 12:54 PM
image

இலங்கையின் எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள  தமிழ் தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது.

எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எல்ஜிபிடிகியு சமூகத்தினரின் நலன்களை அங்கீகரிக்கும் பாதுகாக்கும் மேம்படுத்தும் அனைத்துவகையான சட்டங்கள் மற்றும் மாற்றங்களிற்கு எங்கள் கட்சி ஆதரவளிக்கும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில்  சனிக்கிழமை  இடம்பெற்றது.

சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.

இந்த நடைபவனி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையம் முன்னால் இருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதியூடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது. 

யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் பலரும் தன்னார்வத்தோடு கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07