சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சிங்கம் 3 படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி போயிருக்கிறது.

சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். டிசம்பர் 16, டிசம்பர் 23 பின்னர் ஜனவரி 26 என வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையில் தன்னுடைய படம் வெளியாவதை சூர்யா விரும்பவில்லையாம். அதனால் இப்படம் பிப்ரவரி 10 ஆம் திகதியன்று வெளியாகும் என்று தெரியவருகிறது.

அடுத்தமாதமாவது சூர்யா வருவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்