அமெரிக்காவில் தொடரும் நிறவெறி : 3 வருடங்கள் கடந்த ‘கறுப்பு உயிர்கள்' பொருட்டு போராட்டம் 

Published By: Vishnu

11 Jun, 2023 | 12:21 PM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா

கறுப்பின மக்களின் வாழ்வும் - வரலாறும் அமெரிக்காவின் உண்மையான ஜனநாயகம் என்பதனை சோதனைக்கு உட்படுத்தும் விடயமாகும். அமெரிக்க காவல் துறைக்கும், கறுப்பினத்தவருக்கும் இடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகவும் விளங்குகிறது.

ஆபிரகாம் லிங்கன் முதல் 2020 மே இறுதியில் உலகின் கவனத்தை ஈர்த்த ஜோர் புளொய்ட் மரணம் வரை அமெரிக்காவில் தொடரும் நிறவெறியை வெளிச்சத்திற்கு இட்டுள்ளது. மூன்று  வருடங்கள் கடந்தும், "கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்" ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் அடங்கவில்லை,ஓயவும் இல்லை.

முதன்முதலாக ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாட்டின் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்ட 1619ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரையிலான 349 ஆண்டு காலத்தில், கருப்பின மக்கள் தங்கள் முழுமையான குடியுரிமை உரிமைகளை கொள்கையளவில் 1968ஆம் ஆண்டுதான் சமத்துவ வீட்டு வசதிச் சட்டத்தின் மூலம் பெற்றனர்.

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான நிறவெறி என்பது பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது என்பதை அந்நாட்டின் வரலாறு தெளிவு படுத்துகிறது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை வந்தேறிகளான ஐரோப்பியர்கள் கூலி வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்களை அழைத்து வந்து அடிமைகளாக வேலை வாங்கி வந்தனர்.

அமெரிக்க வெள்ளையர்களால் சொல்லொணாக் கொடுமைகளுக்குக் கறுப்பின மக்கள் உள்ளாக்கப்பட்டனர். அதை எதிர்த்து ஆபிரகாம் லிங்கன்(1809 - 1865) குடியரசுத் தலைவரான பிறகு, 1865ஆம் ஆண்டு அடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் 1860ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் தேர்வுக்கு முன் வரை அமெரிக்காவில் அடிமை முறை நீண்ட காலமாக இருந்தது. கறுப்பினத்தவரை மனிதச்சமூகமாக அங்கீகரிக்காமல் உழைப்புக்காக விற்கப்படும் முறைமையை அமெரிக்கா வைத்திருந்தது.

ஆபிரகாம் லிங்கனின் தலைமையிலான அரசு அடிமை முறையை ஒழிக்க முதன்முறையாக முன்னெடுப்புகளை எடுத்த போது பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே ஜோன் வில்சு பூத் என்பவரால்லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நிறவெறி சற்றுத் தளர்ந்ததே தவிர, முற்றிலும் ஒழிந்து விடவில்லை.

ஆபிரகாம் லிங்கனின் தலையை துளைத்த தோட்டாவுக்கு பின்னால் நிறவெறி ஒடுக்குமுறையின் பாரிய வரலாறு இருக்கிறது. அந்த தோட்டாவை உமிழ்ந்த துப்பாக்கி இன்னும் புகை தணியாமல் இருப்பதற்கு இன்னும் பல சாட்சிகள் அச்சமூகத்தில் நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கறுப்பினப் பாதிரியாரான மார்டின் லூதர் கிங் (1929 - 1968) கறுப்பின மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடினார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் மால்கம் X (1925 - 1965) எனும் கறுப்பினப் போராளி நிறவெறிக்கு எதிரான மிகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். அவரும் இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்படுவதற்கு சரியாக 7 மாதங்களுக்கு முன்பு, 1967ஆம் ஆண்டு வொஷிங்டனில் உள்ள அமெரிக்க உளவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய உரை முக்கியமானது.

அவரது உரையில், “வெள்ளை அமெரிக்கா தனது ஆன்மாவிலேயே இனவெறியால் நஞ்சூட்டப்பட்டுள்ளதை அது புரிந்துகொள்ள வேண்டும். அந்த புரிதல்கள் கவனமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும், கலகங்கள்தான் புறக்கணிக்கப் பட்டவர்களின் மொழியாக எழுகிறது என்ற வார்த்தை முக்கியத்துவம் பெற்றது.

கலகங்கள் தான் புறக்கணிக்கப் பட்டவர்களின் மொழி என்பது டாக்டர் மார்டின் லூதர் கிங்கின் வார்த்தை. பகலில் அமைதியாக நடக்கும் அணிவகுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், இரவில் மட்டும் ஏன் வன்முறை வெறியாட்டங்களாக, பொதுச்சொத்தை சூறையாடுவதாக இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட முயற்சிக்கும் மேற்குலக ஊடகங்களில் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன.

கறுப்பின மக்களை அமெரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டி, கூ கிளக்ஸ் கான் (Ku Klux Khan - KKK) எனும் வெள்ளை இனவெறி இயக்கம் 1860 ஆம் ஆண்டில் நெதம் பெட்போர்ட் பாரஸ்ட் என்பவரால் டென்னிசி மாகாணத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

அத்துடன் வெள்ளைத் தேசியத்தை (White Nationalism) உயர்த்திப் பிடிக்க வேண்டும், நூறு வீதம் "தூய்மையான" அமெரிக்காவை உருவாக்க வேண்டும் என்பன இந்த நவீன நாஜி இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளாக இருந்தன.

இந்த வலதுசாரித் தீவிரவாத இயக்கம் தனது நோக்கத்தை நிறைவேற்ற வன்முறையே ஏற்றது என முடிவெடுத்து, கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற கறுப்பின மக்களைப் படுகொலை செய்துள்ளது.

இந்த இயக்கம், அமெரிக்காவைக் கடந்து கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இப்பொழுது செயற்பட்டு வருகிறது. இதனாலேயே எண்ணற்ற கறுப்பினத் தலைவர்கள், அமெரிக்காவில் நிலவும் வெள்ளையின நிறவெறிக்கு எதிரான தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இருப்பினும், 33 கோடி மக்கள் தொகையுள்ள அமெரிக்காவில் 76சதவீத வெள்ளை இனத்தவர்கள், 14சதவீத கறுப்பு இனத்தவர்கள், ஆசிய நாட்டினர் 6சதவீத, பல்வேறு நாட்டினர் 3சதவீத எஞ்சியுள்ள ஒரு சதவீத பழங்குடியினர் என்ற அடிப்படையில் மக்கள் வாழ்வதால், அமெரிக்காவின் மரபணுவிலேயே இனவெறி ஊன்றிக்கிடக்கிறது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் 2020 மே மாதம் 25ஆம் திகதி ஆயுதம் ஏதும் வைத்திராத கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் புளொய்ட்என்ற நபர் இறந்தார். அவரை பொலிஸ் உத்தியோகத்தரே முழந்தாளால் அழுத்திக் கொலைசெய்யும் காணொளியும் வெளியானது.

இந்தப் பின்னணியில் தான் உலகெங்குமுள்ள மக்கள் கடுங்கோபத்திற்கு உள்ளாகினர். இப்படுகொலைக்கு எதிராக வெள்ளை இனத்தைச் சார்ந்த எண்ணற்றோர் வீதியில் அணிதிரண்டது பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

கறுப்பினத்தவர் அடிமைகளாக இருக்க வேண்டியதில்லை என அறிவித்ததற்காகவே ஆபிரகாம் லிங்கன் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதை வழங்கியதற்காகவே ஒரு மாபெரும் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் சேர்த்துதான் அமெரிக்க சமூகத்தை அவதானிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் தொடரும் நிறவெறியை வெளிச்சத்திற்கு இட்டுச் சென்ற “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்" ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் அடங்கவில்லை, மூன்று வருடங்கள் கடந்தும் இப்போரட்டம் இன்னமும் ஓயவும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் தொழிலுக்காக வருகை தரும் ரஷ்ய...

2024-02-23 20:52:33
news-image

நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன...

2024-02-23 11:46:06
news-image

ஆயுளை முடித்துக்கொண்ட கிராண்பாதர்

2024-02-22 18:41:32
news-image

தொழிலாளர்களை தேடிச் செல்லும் பிரதிநிதிகள்!

2024-02-22 17:37:26
news-image

சவாலாக மாறுகிறதா சர்வதேச கடன் மறுசீரமைப்பு? 

2024-02-21 19:01:04
news-image

உட்கட்சி பூசல்கள் தமிழ் மக்களின் அரசியல் ...

2024-02-21 13:51:47
news-image

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி...

2024-02-21 13:12:29
news-image

நவால்னி சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா ?...

2024-02-21 12:52:32
news-image

மலையக மக்களும் அஸ்வெசும திட்டமும்

2024-02-20 11:42:52
news-image

இலங்கை கடன்களில் மாத்திரம் தங்கியிருக்கும் நிலை...

2024-02-20 11:36:03
news-image

சித்திரை புத்தாண்டுக்குப்பிறகு பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதி...

2024-02-20 02:41:33
news-image

அரசியலும் ஆன்மிகமும் ஒருமித்து பயணிக்கும் முயற்சி...

2024-02-19 17:18:48