(எம்.வை.எம்.சியாம்)
காலி, அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10) அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவரை சோதனையிட முற்பட்டபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வீதியோரமாக நின்றுகொண்டிருந்த இருவரை சோதனையிடுவதற்கு முயற்சித்தபோது, அதில் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்றைய நபர் தம் வசம் வைத்திருந்த வெடிகுண்டினை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வீசுவதற்கு முயன்றபோது பொலிஸாரினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, தப்பியோடிய சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து டி56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM