நைஜீரிய விமானப்படையால் தீவிரவாதிகள் என கருதி தவறுதலாக தாக்கப்பட்ட அகதிகளின்  பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது கடந்த ஜனவரி 17ஆம் திகதி அந்நாட்டு ராணுவ விமானப் படையை சேர்ந்த விமானம் தவறுதலாக தாக்குதல் நடத்தியது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாகவும், பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள தரவுகளின் படி  தாக்குதல் நடைபெற்ற ரான் முகாமிலேயே 234 உயிரிழந்துள்ளதோடு, அருகில் உள்ள மாய்துகுரி மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இறந்துள்ளனர்.