யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை உருவாக்க வேண்டும் - யாழ். மாவட்ட செயலாளர்

Published By: Nanthini

10 Jun, 2023 | 08:17 PM
image

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மாவட்ட ரீதியாக தமக்குள் சங்கமொன்றை உருவாக்கி செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கோரிக்கை விடுத்தார்.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றி கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகள், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 

இதன்போதே, யாழ். மாவட்ட செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, 

தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை அவதானிப்பதற்காக பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

குறித்த குழுவில் சம்பந்தப்பட்ட துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கும்போது தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகளை உள்ளடக்க வேண்டிய தேவையுண்டு. 

அந்த வகையில், தனியார் கல்வி நிலையங்கள் ஒரு கூட்டாக, சங்கமாக பதிவு செய்து செயல்படும்போது அதனை மேற்கொள்ள எமக்கு இலகுவாக இருக்கும்.

தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும். தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கண்காணிக்கப்படும்.

தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம் மற்றும் பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயம் ஆகும்.

எதிர்வரும் ஜுலை மாதம் 1ஆம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா இந்திய விவகாரம் -இலங்கை இந்தியாவிற்கு...

2023-09-26 08:34:02
news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49