சகல விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் LGBTQIA+ சமூகத்துக்கு எதிரான பாகுபாடுகளை எதிர்த்து சுயமரியாதை நடைபயணமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்த நடைபவனி அமைந்தது.
இந்த நடைபவனி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையம் முன்னால் இருந்து ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதியூடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஆதரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் பலரும் தன்னார்வத்தோடு கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM