ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய பாதுகாப்பு துறைசார் குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம்

Published By: Digital Desk 3

10 Jun, 2023 | 03:22 PM
image

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக்காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.

குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன. 

தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.

மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடிரூபவ் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலிற்கு உதவினார் என்பது உறுதியானால் ரணிலுக்கு...

2024-09-18 10:42:01
news-image

வவுனியாவில் தேர்தல் பதாதைகள், சுவரொட்டிகளை நீக்கும்...

2024-09-18 10:54:27
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-18 10:31:57
news-image

சிறுவர்கள், பெண்களின் உரிமையை நாட்டின் அடிப்படை...

2024-09-18 10:21:26
news-image

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட...

2024-09-18 10:40:21
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,737...

2024-09-18 10:25:02
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகைப் பணத்தை...

2024-09-18 09:56:54
news-image

வாகன விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை...

2024-09-18 10:29:39
news-image

இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்...

2024-09-18 09:31:58
news-image

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-09-18 09:04:31
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2024-09-18 09:07:30
news-image

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா...

2024-09-18 08:47:37