தயாரிப்பு: ஃபேஷன் ஸ்டுடியோஸ்
நடிகர்கள்: சித்தார்த், திவ்யன் ஷா கௌஷிக், யோகி பாபு, அபிமன்யு சிங், முனீஸ்காந்த், விக்னேஷ் காந்த் மற்றும் பலர்.
இயக்கம்: கார்த்திக் ஜி. கிரிஷ்
மதிப்பீடு: 2 / 5
ஷங்கரின் உதவியாளரும், 'கப்பல்' படத்தின் இயக்குநருமான கார்த்திக் ஜி கிரீஷ் சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் 'டக்கர்'. இத் திரைப்படம் அவருக்கு வெற்றியை அளித்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
செல்வந்தராக வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னைக்கு வருகை தருகிறார் குன்ஸ் என்கிற குணசேகரன் ( சித்தார்த்). பல இடங்களில் பணியாற்றும் குணசேகரனுக்கு எந்த வேலையிலும் நிரந்தரமாக நீடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் சொகுசு கார் ஒன்றிற்கு வாடகை சாரதியாக பணியாற்றத் தொடங்குகிறார். இத்தகைய பயணத்தின் போது நாயகியை (திவ்யன் ஷா கௌஷிக்) சந்திக்கிறார் கண்டவுடன் காதலும் கொள்கிறார். ஒரு இக்கட்டான சூழலில் சட்ட விரோத காரியங்கள் நிகழும் இடத்திற்கு சித்தார்த் செல்கிறார். அங்கிருந்த சொகுசு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு செல்கிறார். அந்தக் காரின் பின்பகுதியில் இவர் விரும்பிய பணக்கார பெண் கடத்தப்பட்டு, கை கால் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். காதல் தான் பெரிது என்று சித்தார்த்த சொல்ல... பணம் தான் பெரிது என்று திவ்யான் ஷா சொல்ல... இருவரும் ஒருவரை ஒருவர் எப்போது.. எப்படி.. புரிந்து கொண்டு ஒன்றிணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ஒரு சவாலான.. சுவாரசியமான.. சாலை மார்க்க பயணத்தை மையமாகக் கொண்ட படைப்பை காணலாம் என ஆவலுடன் இருக்கையில் அமர்ந்தால்.. கதை... திரைக்கதை... அடுத்த காட்சி என ஒவ்வொன்றும் பார்வையாளர்கள் அவதானித்ததை போலவே திரையில் தோன்றுவதால் சலிப்புதான் ஏற்படுகிறது. நாயகியாக நடித்திருக்கும் திவ்யன் ஷா கௌசிக்கின் அசத்தலான கவர்ச்சியான நடிப்பு. யோகி பாபுவின் நகைச்சுவை.. ஒரு பாடல் ஆகியவை மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறது. சண்டைக் காட்சிகளில் சித்தார்த் கடுமையாக உழைத்திருந்தாலும் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கத் தோன்றுகிறது.
படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்திருக்கிறது. சித்தார்த் தன்னுடைய தோற்றத்தில் இளமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அழகான ஏழைப் பையன் என்ற கதாபாத்திரத்திற்கு தன்னுடைய திறமையான நடிப்பால் நியாயம் கற்பிக்கிறார்.
விளிம்பு நிலை மக்களை ஈர்க்கும் ஏழை- பணக்காரன் என்ற முரணை மூல கதையாக எடுத்துக் கொண்ட இயக்குநர்.. துணிச்சல் மிக்க நாயகி கதாபாத்திரமான லக்கியை உருவாக்கிய இயக்குநர்... அதற்கு சுவாரசியமான திரைக்கதையை எழுத தடுமாறி, தவறி இருக்கிறார்.
டக்கர்- மக்கர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM