(நா.தனுஜா)
அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது.
வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங்,
"இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகளின் பின்னணியில் இச்சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM