ரயில், பஸ் ஆகிய பொது போக்குவரத்து சேவைகளில் நேற்று முதல் பிச்சையெடுப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ரயில் வண்டிகளில் பிச்சையெடுப்பது, மிதிபலகையில் பயணம் செய்வது உட்பட ரயில்வே சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ரயில்வே பாதுகாப்பு அதிகாரி சுசேல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் கடவையில், கடவை மூடப்பட்டிருக்கும் போது வாகனங்களை செலுத்துவோர் மீதும்,நடந்து செல்பவர்கள் மீதும் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.