கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை நசுக்கும் ஒரு நடவடிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் பேரவை

Published By: Rajeeban

10 Jun, 2023 | 11:12 AM
image

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டமை தமிழ் இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் அவரின் குரலை நசுக்கும் ஒரு நடவடிக்கை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

மருதங்கேணியில் இடம்பெற்ற தனக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டமிட்டிருந்தவேளை ஏழாம் திகதி பொலிஸார் அவரை கைதுசெய்தனர் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதை தடுப்பதற்காக அவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்பு தமிழர்களிற்காக குரல்கொடுத்தமைக்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தை குமார் பொன்னம்பலமும் கொல்லப்பட்டார் என்பதை நினைவுகூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

வேறு நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர் ஆனால் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிரான அரச ஒடுக்குமுறையை ஏற்றுக்கொண்டால் கண்டிக்க தவறினால் சாதாரண தமிழ் மக்கள் பொலிஸாரிடமிருந்து எவ்வாறான நிலையை எதிர்கொள்வார்கள் என்பதை சர்வதேச சமூகம் நினைத்துப்பார்க்கவேண்டும்,நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிற்கு எதிரான சம்பவத்திற்கு ஒரு வாரத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது- இது ஐக்கியநாடுகள் மனித உரிமை பிரகடனத்தின் பல சரத்துக்களை மீறி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறையின் தொடர்போக்கை வெளிப்படுத்தியுள்ளது எனவும் ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைகள் மற்றும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் தந்திரோபாயங்களிற்கு எதிராக சர்வதேச சமூகம் எந்தவித தயக்கமும் இன்றி கண்டனத்தை தெரிவிக்கவேண்டும்   என அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்கம் தான் பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவிக்கும்  தமிழ்மக்களின் உரிமைகளை மீறுவது அலட்சியம் செய்வதை நிறுத்தவேண்டும் என்ற தெளிவான செய்தியை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் ஜனநாயகம் மனித உரிமைகளை பெறுமதிமிக்கவையாக கருதுபவர்களும் தெரிவித்தால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்படும் என புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக்கிரமித்துள்ள படையினர் தமிழ்மக்களை வன்முறை ரீதியில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் என்பதை மேற்சொன்ன சம்பவங்கள் புலம்படுத்துகின்றன, யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக பௌத்த ஆலயத்தை அமைக்கும் நடவடிக்கைகளிற்கு எதிராக  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தி;ல் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் இலங்கையில் சிங்களவர்கள் சட்டத்திற்கு அப்பாற்றபட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அனைத்துலக  ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா இந்திய விவகாரம் -இலங்கை இந்தியாவிற்கு...

2023-09-26 08:34:02
news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49