14இன் கீழ் சமபோஷ பாடசாலைகள் கால்பந்தாட்டம் : 600க்கும் மேற்பட்ட அணிகள், 9000 வீர, வீராங்கனைகள்

Published By: Nanthini

10 Jun, 2023 | 10:56 AM
image

(நெவில் அன்தனி)

மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் மிகவும் பிரமாண்டமான முறையில் 14 வயதுக்குட்பட்ட  சமபோஷ அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.

கொவிட் - 19, பொருளாதார நெருக்கடி, அரசியல் போராட்டம் என பல்வேறு காரணங்களினால் தடைப்பட்டிருந்த இப்போட்டியை இம்முறை மிகச் சிறந்த முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்தது.

இந்த வருடம் 25 மாவட்டங்களில் 32 நகரங்களில் இருபாலாருக்கும் 900க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

12ஆவது சமபோஷ கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டி வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் நடைபெறவுள்ள போட்டிகளுடன் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதம் 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ன.

திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டப் போட்டிகள் ஜூன் 16, 17, 18ஆம் திகதிகளிலும் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்ட போட்டிகள் ஜூன் 22, 23, 24ஆம் திகதிகளிலும் மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மாவட்ட போட்டிகள் ஜூன் 25, 26, 27ஆம் திகதிகளிலும், பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டப் போட்டிகள் ஜூன் 28, 29, 30ஆம் திகதிகளிலும், நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்டப் போட்டிகள் ஜூலை 1, 2, 3ஆம் திகதிகளிலும் களுத்துறை, அம்பலாங்கொடை, காலி ஆகிய மாவட்டப் போட்டிகள் ஜூலை 7, 8, 9ஆம் திகதிகளிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டப் போட்டிகள் ஜூலை 14, 15, 16ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இறுதிச் சுற்றான முன்னோடி கால் இறுதிகள், கால் இறுதிகள், அரை இறுதிகள் என்பன ஜூலை 21, 22, 23ஆம் திகதிகளில் கம்பஹா மாவட்டத்தில் நடைபெறும்.

இரு பாலாரிலும் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டிகளும் சம்பியன்களைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டிகளும் ஜூலை 29ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறவுள்ளன.

இது இவ்வாறிருக்க, இந்த வருடம் முதல் சுற்றிலிருந்து இறுதிப் போட்டி வரை அதிசிறந்த 350 வீர, வீராங்கனைகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு கொழும்பில் விசேட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சிகள் சிட்டி லீக் திடலில் வழங்கப்படும் என இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க, சமபோஷ பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு 12ஆவது தொடர்ச்சியான தடவையாக சி.பி.எல். சமபோஷ அனுசரணை வழங்குகிறது.

இப்போட்டிக்கான அனுசரணையை சி.பி.எல். ஃபுட் க்ளஸ்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலன்க டி சொய்ஸாவிடமிருந்து கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரதுங்க, இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத் தலைவர் பண்டார லீலரட்ன ஆகியோர் பெற்றக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சி.பி.எல். ஃபுட் க்ளஸ்டர் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சச்சி பெர்னாண்டோ, கல்வி அமைச்சின் உதவி விளையாட்டுத்துறை பணிப்பாளர் டெரிக் ஜயவர்தன, இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்க செயலாளர் என்.எஸ்.பி. திசாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58