(நா.தனுஜா)
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் மற்றும் இயக்கம் என்பன தொடர்பில் தமது இறுதி அறிக்கையில் விரிவான பரிந்துரைகளை முன்வைக்கவுள்ள நீதியரசர் எ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, நீதி மற்றும் பொறுப்புகூறல் சார்ந்த விடயங்கள் குறித்தும் பரிந்துரைக்கவுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
அந்த ஜனாதிபதி ஆணைக்குழுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கடந்த மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது ஜனாதிபதியினால் அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முழுமையாகத் தயார்செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிவதுடன் அது இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும், தவிர்க்கமுடியாத சில காரணங்களின் விளைவாக அவ்வறிக்கை ஜுலை மாத முதல் வாரத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க தமது பூர்வாங்க அறிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம் எனவும், ஆணைக்குழுவின் ஆணையாளராக தமிழ் பேசக்கூடிய ஒருவரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் ஆணைக்குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்படுமென அறியமுடிகின்றது.
அத்தோடு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைபொன்று தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வரைபில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள், திருத்தியமைக்கப்படவேண்டிய விடயங்கள் என்பன பற்றியும் ஆணைக்குழு பரிந்துரைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM