டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் - 38 அணிகள் பங்கேற்பு

09 Jun, 2023 | 08:36 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டயலொக் 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் றக்பி லீக் போட்டி இன்னும் சில தினங்களில் கலைகட்டவுள்ளன. இந்த வருடப் போட்டியில் 3 தொகுதிகளில் 38 அணிகள் பங்குபற்றவுள்ளன.

முதலாம் பிரிவு ஏ தொகுதியில் 14 அணிகளும் பி தொகுதி மற்றும் சி தொகுதிகளில் தலா 12 அணிகளும் பங்குபற்றுகின்றன.

இந்த சுற்றுப் போட்டிக்கான கிண்ண அறிமுக வைபவமும் ஊடக சந்திப்பும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பென்குவே அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வருட டயலொக் 19 வயதுக்குட்பட்ட றக்பி லீக் போட்டிகள் கண்டி போகம்பறை மைதானத்தில் ஜூன் 14ஆம் திகதி நடைபெறவுள்ள புனித அந்தோனியார் அணிக்கும் புனித சூசையப்பர் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகிறது.

அதனைத் தொடர்ந்து இரண்டு குழுக்களில் 7 வாரங்கள் ஏ தொகுதி போட்டிகள் நடைபெறும்.

தொகுதி ஏயில் 2 குழுக்களிலும் மொத்தம் 42 லீக் போட்டிகளும் பி மற்றும் சி தொகுதிகளில் தலா 30 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்த 3 தொகுதிகளில் இம்முறை தரமிறக்கம் இடம்பெறமாட்டாது எனவும் பி மற்றும் சி தொகுதிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தரம் உயர்த்தப்படும் எனவும் அடுத்த வருடத்திலிருந்து தரமுயர்வு மற்றும் தரமிறக்கம் இடம்பெறும் எனவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த மூன்று தொகுதிகளிலும் ஏ தொகுதிக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பையும் பரப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் நடைபெற்ற லீக் போட்டி முடிவில் ஏ தொகுதியில் முதல் 14 இடங்களைப் பெற்ற அணிகள் தரவரிசைப் படுத்தப்பட்டு இந்த முறை குழுநிலைப்படுத்தப்பட்டுள்ளன.

பங்குபற்றும் பாடசாலை அணிகள்

தொகுதி ஏ

குழு 1: நடப்பு சம்பியன் இஸிபத்தன (1), புனித சூசையப்பர் (3), வெஸ்லி (5), சென் தோமஸ் (7), புனித அந்தோனியார் (9), கிங்ஸ்வூட் (11), டி.எஸ். சேனாநாயக்க (13).

குழு 2: றோயல் (2), திரித்துவம் (4), வித்தாயர்த்த (6), விஞ்ஞானம் (8), தர்மராஜ (10), புனித பேதுருவானவர் (12), ஸாஹிரா (14)

தொகுதி பி

குழு 1: தேர்ஸ்டன், மலியதேவ, லும்பிணி, புனித அலோசியஸ், ஆனந்த, பிலியந்தல மத்திய கல்லூரி.

குழு 2: கண்டி ஸ்ரீ சுமங்கல, பிறின்ஸ் ஒவ் வேல்ஸ், மஹநாம, புனித பெனடிக்ட், புனித சில்வெஸ்டர், கேரி.

தொகுதி சி

குழு 1: சென் ஜோன்ஸ், ஸ்ரீ ராகுல, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்ர, மொறட்டு மகா வித்தியாலயம், தர்மபால, லலித் அத்துலத்முதலி.

குழு 2: நாலந்த, தேவபத்திராஜ, பாணந்துறை சுமங்கல, சிறி பியரத்தன, ரிச்மண்ட், பண்டாரநாயக்க மத்திய கல்லூரி.

டயலொக் பாடசாலைகள் லீக் றக்பி போட்டிகளுக்கு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகிறது.

இப் போட்டிக்கான பூரண அனுசரணைக்குரிய மாதிரி காசோலையை டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் சந்தைப்படுத்தல் குறியீடு மற்றும் ஊடகப் பிரிவு உதவித் தலைவர் ஹர்ஷா சமரக்கோனிடமிருந்து இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்கத் தலைவர் கமல் அபேசிங்க பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் உபாலி அமரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் சிரேஷ்ட முகாமையாளர் ப்ரஷான் கொஸ்தா, இலங்கை பாடசாலைகள் றக்பிகால்பந்தாட்ட சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59
news-image

ஹசரங்க உபாதையிலிருந்து மீண்டால் மாற்று வீரராக...

2023-09-27 09:51:56
news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59