வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (09.06) தெரிவித்துள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 பாலியல் தொழிலாளர்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM