குரங்குகளால் விவசாய பயிர்களுக்கு கடும் பாதிப்பு : நிபுணர்களின் யோசனை நடைமுறைக்கு சாத்தியமற்றது - விவசாயத்துறை அமைச்சர்

Published By: Nanthini

09 Jun, 2023 | 08:44 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

குரங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும்  சேதத்தை தடுக்க சுற்றாடல்துறை நிபுணர்கள் முன்வைத்துள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை. சகல தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு சிறந்த தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற பயிர்களை சேதப்படுத்தும் குரங்குகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது, 

குரங்குகள் உட்பட காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் விவசாயத்துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 93 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் நாசம் செய்துள்ளன. அதேபோல் காட்டு விலங்குகளால் மாத்திரம் தெங்கு, பலா உட்பட 200 மில்லியன் உணவுப் பொருட்கள் நாசமடைந்துள்ளன.

விளை நிலங்களை ஆக்கிரமித்துள்ள குரங்கு, காட்டு யானை உட்பட விலங்குகள் மனித குடியிருப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. கொழும்பு நகரில் உள்ள பூங்காக்களிலும் குரங்குகள் திரிவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே, காட்டு விலங்குகள் தொடர்பில் விசேட  கவனம் செலுத்த வேண்டும்.

காட்டு விலங்குகளால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பை இழிவளவாக்குவது தொடர்பில் சுற்றுச்சூழல் நிபுணர்கள் முன்வைத்துள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றது. 

பயிர்ச்செய்கையின்போது விலங்குகளுக்கு என தனித்து பயிர்ச்செய்கையை மேற்கொண்டு அதனை விலங்குகளுக்கு ஒதுக்கிக் கொடுக்குமாறு சுற்றாடல் நிபுணர்கள் முன்வைத்துள்ள யோசனை சாத்தியமற்றதாகும். விலங்குகளுக்கு என விவசாயிகள் தனித்து விவசாயம் செய்ய மாட்டார்கள்.

தென்னை மர ஓலையில் தகரம் கட்டுதல், மரத்தை பொலித்தீன், சீலை ஆகியவற்றால் மூடுதல் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றது. விலங்குகளுக்கு என காடுகளில் மரங்களை வளர்க்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள யோசனை சிறந்தது. இருப்பினும், காடுகளில் பலா, மா மரங்களை நாட்டி, உடனே விளைச்சல் பெற முடியாது. அதற்கு நீண்டகாலம் செல்லும். குரங்குகள், காட்டு யானை உட்பட காட்டு விலங்குகளின் இனப்பெருக்கம் தீவிரமடைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குமாறு சீன நாட்டின் தனியார் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆரம்பகட்ட  பேச்சுவார்த்தை எடுத்த நிலையில், ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். சீன அரசாங்கம், சீன தூதரகம் உட்பட சீனர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டார்கள். 

சீனாவுக்கு குரங்குகளை வழங்கும் பேச்சுவார்த்தையை ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள். ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், காட்டு விலங்குகளினால் விளைநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஏதாவதொரு வழிமுறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47