கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் - ஜீவன் சபையில் எச்சரிக்கை

Published By: Vishnu

09 Jun, 2023 | 08:43 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வாக்கு வேட்டைக்காக பதவியேற்றவன் நானல்ல. நாட்டை நேசிக்கும் ஒரு இளைஞன் என்ற ரீதியிலேயே அமைச்சுப் பதவியை ஏற்றேன். அது தொடர்பில் விமர்சிக்க எவருக்கும் அருகதை கிடையாது. என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழைமை (8) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலையகப் பெருந்தோட்ட மக்கள் அட்டைக்கடி, குளவிக் கொட்டு போன்ற கஷ்டங்களை அனுபவிப்பதற்கு தோட்டங்கள் காடாகப் போயுள்ளமையே காரணம்.

அதற்கு தோட்ட நிர்வாகங்கள் பதில் கூற வேண்டும் எனினும் கோத்தாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் இரசாயன உர இறக்குமதி நிறுத்தப்பட்டமையே அதற்கு காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். உண்மையில் 2015 ஆம் ஆண்டு க்ளைபோசெட் நிறுத்தப்பட்டமையை தோட்டங்கள் காடாகியுள்ளமைக்கு காரணம் என்பதே உண்மை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மலையக பெருந்தோட்ட  மக்கள் தொடர்பில் இப்போது சபையில் பேசுகின்றார்.

எனினும் வீடமைப்பு அமைச்சராக அவர் இருந்த காலத்தில் மலையக மக்களுக்காக எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார் என கேட்க விரும்புகின்றேன். அப்போதைய அமைச்சர் திகாம்பரம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்தபோது அவருக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. 629 வீடுகளே அக்காலங்களில் கட்டப்பட்டுள்ளன. நான் பதவிக்கு வந்த பின்னரே 4000க்கும் மேற்பட்ட வீடுகளை முழுமையாக ஒப்படைத்துள்ளேன்.

அதேபோன்று கண்டியில் உள்ள ஒருவரும் என்னை விமர்சித்துள்ளார். கண்டி ஹந்தானை பகுதியில் பாரிய அளவில் காணிகளை அபகரித்துள்ள ஒரு எம்பி யிடமிருந்து 20 ஏக்கர் காணியை பெற்றுக் கொண்டுள்ள அவர் தொடர்பிலும் என்னால் விமர்சனங்களை முன் வைக்க முடியும் என்றாலும் எங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

அதனால் என்னை விமர்சிப்பவர்கள் அவதானமாக செயல்பட வேண்டும். அவர்கள் தொடர்பில் நான் விமர்சனங்களை மேற்கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவிருக்காது. அதனால் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது என நான் அவர்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47