நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் - அமைச்சர் ஜீவன் சபையில் தெரிவிப்பு

Published By: Vishnu

09 Jun, 2023 | 08:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம். என்றாலும் இந்த அதிகரிப்பின்போது சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி  திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீர் கட்டணத்தை நாங்கள் அதிகரிப்போம். நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நீர் கட்டண அறவீடுகளின்படி ஒவ்வொரு மாதமும் 425 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட முடியாது.

இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகி யிருக்கும் மலையக மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க அதனை உபயோகப்படுத்த முடியும். அதேநேரம்  நீர் கட்டணம் அதிகரிக்கும்போது நாங்கள் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி  திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. நீர் பாவனையாளர்களில் 20 சதவீதமானவர்களே இந்த நீர் கட்டண அதிகரிப்புக்குள் உள்வாங்குவார்கள்.

அத்துடன் நீர் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கடந்த 3மாதங்களாக ஆராய்ந்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய  விசேட கலந்துரையாடல் ஒன்று எங்களுக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்றது. அதற்கு சாகல ரத்நாயக்க தலைமை தாங்கி இருந்தார். எவ்வாறெனினும் அந்த கலந்தரையாடலில் இருக்கும் நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சபையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்த கேள்விக்கான பதிலையும் சபைக்கு சமர்ப்பித்திருந்தேன்.

என்றாலும் நான் சபையில் இல்லாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் இருக்கும் ஒருவர், அது தொடர்பில் விமர்சித்துள்ளார். எங்களுக்கு பொறுப்பில்லை என தெரிவிப்பதற்கு இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. நாங்கள் வாக்குகளுக்கு இந்த அமைச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை முன்னேற்றுவதற்காக எங்களால் முடிந்த சேவையை மேற்கொள்வதே எனது நோக்கம். அதனால் நான் எனது பொறுப்பை சரியாக செய்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீலாதுன் நபி தினத்தில் பச்சை, வெள்ளை...

2023-09-26 07:06:08
news-image

18 மாதங்களில் 348 விசேட வைத்திய...

2023-09-25 22:11:53
news-image

நாட்டில் பல இடங்களில் மழைக்கான சாத்தியம்...

2023-09-26 06:56:47
news-image

இலங்கையில் நிலநடுக்கம்

2023-09-26 06:20:33
news-image

நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகும்...

2023-09-25 21:47:22
news-image

சமூகவலைத்தளங்களை அடக்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில்...

2023-09-25 22:00:28
news-image

பிரகடனங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் தன்முனைப்பின்றி இலக்குகளை...

2023-09-25 21:59:41
news-image

சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களின் தீர்மானங்கள் அனைத்து...

2023-09-25 22:10:55
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி அகழ்வுப்பணி ;...

2023-09-25 21:55:38
news-image

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு...

2023-09-25 21:47:51
news-image

பிலியந்தலயில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தாயும் மகனும்...

2023-09-25 22:07:49
news-image

ஹோமாகம பூங்காவில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்...

2023-09-25 22:05:06