வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய விவசாயி

Published By: Digital Desk 3

09 Jun, 2023 | 04:12 PM
image

வெங்காய செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

அச்சுவேலி பகுதிகயைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார்.

இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை  பயிர்செய்கை செய்துள்ளார். 

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடுகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

அத்துடன் குறிந்த இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது அதன் மூலம் எப்படி நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது. குறைத்த நடுகை முறை வெற்றி அளிக்கும் முறையாக விவசாய அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டால் அதனை அனைவருக்கும் பரிந்துரைப்பதற்கு முன்வரவுள்ளனர்.

நிகழ்வில் வடமாகாண விவசாய பணிப்பாளர்  சுகந்தினி செந்தில்குமரன் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி முன்னாள் விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் விவசாய அதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08