கணையம் காப்போம்!

Published By: Ponmalar

09 Jun, 2023 | 08:11 PM
image

செரிமான மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்பு கணையம். இது பாதிக்கப்பட்ட பின்னரே, பலரும் இதன் அபாயத்தை உணர்கிறோம். உணவு செரிமான மண்டலத்தில், இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கும் வால் போன்ற ஓர் உறுப்பு, கணையம். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான  என்சைம்கள் இன்சுலின் ஆகியவை சுரக்கின்றன.  செரிமானத்தின் போது, கணையத்தில் இருந்து சுரக்கப்படும் என்சைம், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய் கலக்கிறது. இந்த என்சைம் அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது. 

நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களால் கணையம் வீக்கம் அடைவதையே கணைய அழற்சி என்கிறோம். கணைய அழற்சியின்போது, இந்த என்சைம், கணையத்தில் தேங்கி இருக்கும்போது, செரிவுற்றதாக மாறுவதால், கணைய செல்கள் அரிக்கப்படுகின்றன. கணையத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை, உடனடி பாதிப்பு, நீண்ட நாள் பாதிப்பு என்று பிரிக்கலாம். சாதாரண பாதிப்பு என்றால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். மிகமோசமான நிலையில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். 

அறிகுறிகள்
மார்புக்குக் கீழ், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டு முதுகு வரை பரவுதல் சாப்பிட்ட பிறகு மேல் வயிற்று வலி அதிகரிப்பு. காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றைத் தொட்டால் கடுமையாக வலி, படுத்தால் வயிற்று வலி அதிகரிக்கும். முன்பக்கம் சாய்ந்தால் வலி குறையும். 

அழற்சிக்கான காரணங்கள்
மது, சிகரெட், போதைப் பொருள் உபயோகிப்பது, கிருமித் தொற்று, பித்தப்பை கல், விபத்தினால் வயிற்றில் காயம் ஏற்படுவது, மருந்துகள் தரும் பக்க விளைவு, கணையத்தில் நீர்க்கட்டி, மரபியல்விஷக் கடி, ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பு, கணையப் புற்றுநோய், அழற்சி தீவிரமடைவதன் அறிகுறிகள், கடுமையான மேல் வயிற்று வலி, உடல் எடையைக் குறைக்க முயற்சிக்காமலே எடைகுறைதல், எண்ணெய்  பசையுடனும் நாற்றத்துடனும் மலம் வெளியேறுதல் மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் ஒரு எண்டோக்ரைன் நிபுணரை அணுகி தேவையான சிகிச்சை பெறுவது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில்...

2023-09-28 15:05:39
news-image

பெண்களுக்கு ஏற்படும் பிரத்தியேக சிறுநீர் கசிவு...

2023-09-27 15:30:10
news-image

இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான எளிய...

2023-09-26 17:14:05
news-image

உடற்பயிற்சியின் மூலம் வலிகளை குணப்படுத்துவோம் -...

2023-09-25 15:49:32
news-image

ஹலிடோசிஸ் எனும் வாய் துர்நாற்ற பாதிப்பிற்குரிய...

2023-09-25 12:36:36
news-image

மன அழுத்தத்தை குறைக்கும் டாக்கிங் தெரபி...

2023-09-23 15:38:51
news-image

கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

2023-09-22 13:05:56
news-image

பேறு காலத்தின் போது பெண்களுக்கு மார்பக...

2023-09-21 13:49:25
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பாதிப்பிற்குரிய...

2023-09-20 14:01:29
news-image

இடியோபதிக் இன்ட்ராகிரானியல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் மூளை...

2023-09-19 17:09:39
news-image

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-09-18 14:21:13
news-image

நிபா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

2023-09-16 17:06:10