(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சீனாவிலிருந்து சேதன பசளை கொண்டுவர எடுத்த நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை சரிசெய்வதற்கு அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அது தொடர்பான கணக்காய்வு அறிக்கையையும் திட்டமிட்டு தாமதித்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சீனாவில் இருந்து சேதனப்பசளை கொண்டுவருவதற்காக அரசாங்கம் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி இருந்தது. என்றாலும் உரமும் இல்லை.
பணமும் கிடைக்கவில்லை. வங்கியில் பணம் செலுத்தியமையால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. இது தொடர்பாக கணக்காய்வாளரின் அறிக்கையில் அனைத்து விடயங்களும் இருக்கின்றன.
அதனால் இந்த பணத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? எப்போது இதனை மேற்கொள்வது என கேட்கிறேன்.
அதேபோன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் விவசாய நிறுவனம் ஒன்றில் இருந்து 21இலட்சம் லீட்டர் நெனோ நைட்ரிஜன் திறவ உரம் பிழையான முறையில் முற்பதிவு செய்திருக்கிறது.
இதுதொடர்பாக அடுத்த நடவடிக்கை மேற்கொள்ள இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்திருந்தபோதும் இதுவரை அவ்வாறான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.
நெனோ நைட்ரிஜன் திறவ உரம் 500 மில்லி லீட்டரை இந்தியா 3 டொலர் 23 சதத்துக்கு கொள்வனவு செய்துள்ளபோதும் இலங்கை 12 டொலர் 45சத்துக்கு கொள்வனவு செய்திருந்துள்ளது. அப்படியாயின் 500 மில்லி லீட்டருக்காக இந்தியாவை விட 1867 ரூபா மேலதிகமாக செலுத்தி இருக்கிறது. அதன் பிரகாரம் இதனால் ஏற்பட்ட முழு மேலதிக செலவு 7.8 பில்லியனாகும்.
அதனால் நெனோ நைட்ரிஜன உரம் மோசடி தொடர்பில் அரசாங்கத்தின் .நிலைப்பாடு என்ன? அது தொடர்பான அறிக்கை எங்கே? ஏன் அந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் இருக்கிறது.
இந்த மோசடி காரர்கள் யார். எனவே 2019க்கு பின்னர் நாடடில் 40 இலட்சம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் கழிவு உரம் மற்றும் நைட்ரிஜன் உரம் ஊடாக மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கும் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், உரம் மோசடி தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் பல தடவைகள் கேட்டிருக்கிறோம். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.
கழிவு உரம் மோசடியால் 2500 மில்லியன் இல்லாமல் போயிருக்கிறது. ஒருசிலரை பாதுகாப்பதற்காக இது தொடர்பான கணக்காய்வு அறிக்கையை அரசாங்கம் திட்டமிட்டு தாமதித்து வருகிறது. என்றாலும் அரசாங்கத்தில் இருந்து முறையான பதில் வழங்கப்படுவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM