புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலம் ஒன்றுக்கு அந்நாட்டுப் பாராளுமன்றம் இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுவரை புலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எத்தனை தடவைகள் மேன்முறையீடு செய்தாலும், தீர்மானம் மேற்கொள்ளப்படும்வரை ஜப்பானில் தங்கியிருக்க முடியும்.
ஆனால், புதிய சட்டத்தின்படி, 3 தடவைகள் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்பட முடியும்.
ஜப்பானின் எதிர்க்கட்சியினரும் மனித உரிமை குழுக்களும் இச்சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் ஜப்பானிய பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இச்சட்டமூலத்தை அங்கீகரித்தது.
இச்சட்டமானது, பாதுகாக்கப்பட வேண்டியவர்களை பாதுகாப்பதுடன், விதிகளை மீறுபவர்களை கண்டிப்புடன் கையாளும் என ஜப்பானிய நீதியமைச்சர் கென் சைட்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சுமார் 12,500 விண்ணப்பதாரிகளில் 202 பேரை மாத்திரம் ஜப்பான் ஏற்றுக்கொண்டது. மேலும் 1,760 பேரை மனிதாபிமான காரணங்களுக்காக நாட்டில் தங்கியிருக்க அனுமதித்தது.
மற்றொரு திட்டத்தின்கீழ், உக்ரேனிலிருந்து வெளியேறிய சுமார் 2400 பேரை ஜப்பான் ஏற்றுக்கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM