தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'தூக்குதுரை' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ட்ரிப்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தூக்குதுரை'. இதில் யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மகேஷ் சுப்பிரமணியன், சென்ராயன், பால சரவணன், நமோ நாராயணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். மனோஜ் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓபன்கேட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அரவிந்த் வெள்ளை பாண்டியன் மற்றும் அன்பரசு கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “19ஆம் நூற்றாண்டு.. 1999 ஆம் ஆண்டு மற்றும் தற்போதைய காலகட்டம்... என மூன்று வித்தியாசமான காலகட்டங்களில் கதை நடைபெறுவது போல் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலத்து அரசர்களின் வாழ்வியலை மையப்படுத்தி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் .
இதில் யோகி பாபு கிராமத்தில் உள்ள படமாளிகை ஒன்றில் ஒப்பரேட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை காதலிக்கும் பெண்ணாக நடிகை இனியா நடித்திருக்கிறார். கைலாசம் என்னும் கற்பனை ஊரில் கதை நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம்... மூன்று வெவ்வேறு காலகட்ட திரைக்கதை... நகைச்சுவை... என வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பதால், 'தூக்குதுரை' திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM