பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

09 Jun, 2023 | 07:48 PM
image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான மலையாள நடிகர் பகத் பாசில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தூமம்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

கன்னடத்தின் முன்னணி இயக்குநரான பவன் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தூமம்'. இதில் பகத் பாசில், அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ, வினித் ராதாகிருஷ்ணன், அனுமோகன், அச்சுத் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி எஸ்வி இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 'கே ஜி எஃப்', 'காந்தாரா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்படம் இம்மாதம் 23ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இப்படத்தின் முன்னோட்டத்தில் 'தூமம்' என்பது புகையை குறிக்கிறது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்.. பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03
news-image

அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' பட...

2023-09-25 13:11:28
news-image

ஒக்டோபரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட...

2023-09-25 11:46:27
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட அப்டேட்

2023-09-23 16:21:24
news-image

திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின்...

2023-09-22 16:11:42
news-image

இயக்குநர் பேரரசு வெளியிட்ட 'ஐமா' திரைப்பட...

2023-09-22 16:15:49
news-image

பான் இந்திய படத்தில் நடிக்கும் செல்வராகவன்

2023-09-22 16:03:50
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் 'இறுகப்பற்று' படத்தின்...

2023-09-22 16:03:05
news-image

அவளுடன் நானும் இறந்துவிட்டேன் : மகள்...

2023-09-22 13:46:40
news-image

எமி ஜாக்சனின் புதிய தோற்றம்

2023-09-21 14:42:31
news-image

தளபதி விஜயின் 'லியோ'- தமிழுக்கான பதாகை...

2023-09-21 15:38:45
news-image

விதார்த் நடிக்கும் 'டெவில்' திரைப்படத்தின் இரண்டாவது...

2023-09-21 13:48:46