நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் ' பட டைட்டில் லுக் வெளியீடு

Published By: Ponmalar

09 Jun, 2023 | 07:48 PM
image

தமிழ் ரசிகர்களிடம் 'டான்சிங் ரோஸ்' என பெயர் பெற்றிருக்கும் மலையாள நடிகர் ஷபீர் கள்ளறக்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பர்த்மார்க்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பர்த்மார்க்'. இதில் நடிகர் ஷபீர் கள்ளறக்கள் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிர்ணா நடித்திருக்கிறார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சேப்பியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீராம் சிவராமன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து இயற்கையான முறையில் குழந்தையின் பிரசவம் நடைபெறுவதை நாயகன் உறுதிப்படுத்த விரும்புகிறார். இதற்காக நாயகியை இயற்கையான சூழலில் தங்க வைத்து பிரசவத்தை நடத்த திட்டமிடுகிறார். அவரது எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை” என்றார்.

இதனிடையே இந்த திரைப்படத்தில் கருத்தரித்திருக்கும் பெண்ணாக நடிகை மிர்ணா அழுத்தமான வேடத்திலும், நாயகன் ஷபீர் ராணுவத்தில் பணியாற்றும் உயரதிகாரி வேடத்திலும் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35