எம்மில் பலரும் ரத்த சர்க்கரையின் அளவு குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்கும் அளவிற்கு, உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய விழிப்புணர்வை முழுமையாக பெற்றிருக்கவில்லை என குறிப்பிடலாம். உயர் குருதி அழுத்த பாதிப்பிற்கு முறையான சிகிச்சைகளை பெற்று, அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிட்டால்... எம்முடைய சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழக்கத் தொடங்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிலும் உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிட்டால், ரீனல் அற்றரி ஸ்டினோசிஸ் எனப்படும் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவுறுத்துகிறார்கள்.
மேலும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சை மூலம் முதன்மையான நிவாரணத்தைப் பெறலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரத்த அழுத்தம் சீராக இல்லை என்றாலோ... உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ.. இதன் காரணமாக முதன்மையாக பாதிக்கப்படும் உடல் உறுப்பு சிறுநீரகம்.
சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதன் காரணமாகவும் உங்களுடைய ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். உயர் குருதி அழுத்த பாதிப்புள்ளவர்களில் 90 சதவீதத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். அதே தருணத்தில் சிறுநீரகத்தின் செயல்பாடு, இயங்கு திறன் போன்றவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களில் 90 சதவீதத்தினருக்கு உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டால்தான் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
இந்நிலையில் சிலருக்கு உயர் குருதி அழுத்த பாதிப்பின் காரணமாக சிறுநீரகத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதன் அளவு குறுகலாகி... சுருக்க பாதிப்பு ஏற்பட்டு விடும். இதனால் சிறுநீரகத்திற்கு போதுமான ஒக்சிஜன் செல்வது தடைப்படும். இதன் தொடர்ச்சியாக சிறுநீரகங்களின் பணியான கழிவு பொருட்களை வடிகட்டுவதிலும், அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதிலும், சிறுநீரகங்களுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் பாரிய பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக சிறுநீரகத்தில் உள்ள திசுக்கள் சேதமடையும். மேலும் இது உடல் முழுவதும் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
உங்களுடைய ரத்த அழுத்தம் திடீரென்று சமச்சீரற்ற நிலையில் ஏற்பட்டாலோ... 30 வயதிற்கு முன் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ... உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, இது தொடர்பாக அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை அவதானித்துக் கொள்ள வேண்டும். வேறு சிலருக்கு அவர்களுடைய சுகவீனங்களின் போது மேற்கொள்ளப்படும் வேறொரு பரிசோதனையின் மூலம் இத்தகைய பாதிப்பினை அவதானிக்கலாம்.
இதனை உரிய தருணத்தில் கண்டறியாவிட்டால், உங்களுடைய சிறுநீரகம் மட்டுமல்லாமல் இதயம், கண் போன்ற வேறு உறுப்புகளும் பாதிக்கப்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு டாப்ளர் அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் பரிசோதனை, எம் ஆர் ஏ பரிசோதனை, ரீனல் அற்றியோகிராபி பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து தற்போது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகமாகி இருக்கும் மேம்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குவர். இதன் பின்னரும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால், அவர்களுக்கு வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு, ரீனல் ஒஞ்சியோபிளாஸ்டி எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.
டொக்டர். அனந்தகிருஷ்ணன்,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM