எயிட்கன் ஸ்பென்ஸ் உறுதியான EBITDA பெறுமதியாக ரூ. 30.1 பில்லியனைப் பதிவு செய்துள்ளது

08 Jun, 2023 | 09:57 PM
image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனமான எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி, 2022/2023 நிதியாண்டில் சிறந்த EBITDA (முதலீடு செய்யப்பட்ட பங்குகளின் வருமானம், வரிக்கு முந்திய செலவீனங்கள், வரி, மதிப்பிறக்கம் மற்றும் கடன் தீர்ப்புக்கான நிதி சேர்ப்பு ஆகிய அடங்கலான வருமானங்கள்) பெறுமதியான ரூ. 30.1 பி்ல்லியனை பதிவு செய்துள்ளது. சகல துறைகளிலிருந்தான பங்களிப்புடன் இந்தப் பெறுமதி 30.3% வளர்ச்சியை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நியச் செலாவணி வருமதிகள் நீங்கலாக, குழுமத்தின் EBITDA பெறுமதி 77.0% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

குழுமத்தின் செயற்பாடுகளினூடாக இலாபம் 15.8% உயர்வை பதிவு செய்திருந்ததுடன், ரூ. 16.4 பில்லியனிலிருந்து ரூ. 19.0 பில்லியன் வரை உயர்வடைந்திருந்தது.  மேலும், 2023 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், அந்நியச் செலாவணி வருமதி நீங்கலாக குழுமத்தின் செயற்பாடுகளினூடாக இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 85.2% எனும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

2023 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.3% சரிவாகும்.  முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்நியச் செலாவணி சார் வருமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமை இதில் பிரதானமாக தாக்கம் செய்திருந்ததுடன், வருடம் முழுவதிலும் காணப்பட்ட அதியுயர் வட்டி வீதங்கள் காரணமாக வட்டிசார் செலவுகளில் ஏற்பட்டிருந்த அதிகரிப்பும் பங்களிப்புச் செய்திருந்தது. எவ்வாறாயினும், அந்நியச் செலாவணி வருமதிகளுக்கு சீராக்கம் செய்கையில், வரிக்கு முன்னரான இலாபம் 31.9% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. கடந்த நிதியாண்டில் பதிவாகியிருந்த உயர் தளம்பல்களுடனான அந்நியச் செலாவணி மாற்ற வீதங்களை கவனத்தில் கொள்கையில், இந்த சீராக்கத்துடனான ஏற்பாட்டினூடாக வினைத்திறன் தொடர்பான நேர்த்தியான மதிப்பீட்டை எய்த முடிந்திருந்தது.

குழுமத்தின் புவியியல்சார் பன்முகப்படுத்தல் தொடர்பான தந்திரோபாய கவனம் செலுத்துகையினூடாக, சிறந்த பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்தது. குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபத்தில் 60% ஆன பங்களிப்பை வெளிநாட்டுத் துறையினால் பங்களிப்புச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில், கடல்சார் மற்றும் சரக்குக் கையாளல் துறை குழுமத்தின் இலாபகரத்தன்மையில் பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தது. இதன் பங்களிப்பு 69.8% ஆக காணப்பட்டதுடன், சுற்றுலாத் துறையினூடாக 20.8% பங்களிப்பும், தந்திரோபாய முதலீடுகள் துறையினூடாக 4.8% மற்றும் சேவைகள் துறையினூடாக 4.6% பங்களிப்பும் வழங்கப்பட்டிருந்தன. குழுமத்தின் ஒட்டுமொத்த வினைத்திறனை உறுதி செய்வதில் கடல்சார் மற்றும் சரக்குக் கையாளல் துறை முக்கிய பங்களிப்பு ஆற்றப்பட்டிருந்தது. இந்தத் துறையைச் சேர்ந்த சகல ஐந்து பிரிவுகளினூடாகவும் அவற்றின் வலிமை மற்றும் மீண்டெழுந்திறன் ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நேர்த்தியான பங்களிப்புகளையும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும், குழுமத்தின் வினைத்திறனில், ஆடைகள் உற்பத்தி மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த ஹோட்டல்கள் பிரிவு போன்றனவும் ஊக்குவிப்புடனான பங்களிப்பை செலுத்தியிருந்தன. இலக்கு வைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் தந்திரோபாய சீராக்கங்களை மேற்கொள்ளல் போன்றவற்றினூடாக, துராயா சென்னை அதன் வினைத்திறனில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை எதிர்கொண்டிருந்ததுடன், வரலாற்றில் முதன் முறையாக வரிக்கு முந்திய இலாபத்தை இந்த ஹோட்டல் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறையில் மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளும் குழுமத்தின் வினைத்திறனில் நேர்த்தியான பங்களிப்பை செலுத்தியிருந்தன. குறிப்பாக பெருந்தோட்ட மற்றும் ஹோட்டல் துறைகளில், வருமான வரி அதிகரிப்பு காரணமாக அதிகளவு வரிப் பொறுப்புகள் எழுந்திருந்த சூழலிலும் இந்த நிலை எய்தப்பட்டிருந்தது. வலுப் பிறப்பாக்கல் பிரிவில் அரசாங்கத்தில் செலுத்தப்பட வேண்டியிருந்த கொடுப்பனவுகள் நீண்ட காலமாக தாமதித்திருந்தமை காரணமாக, குழுமத்தின் நிதியிருப்புகளில் நெருக்கடி நிலையை தோற்றுவித்திருந்ததுடன், துறையினால் அநாவசியமான நிதிச் செலவை ஏற்க வேண்டிய சூழலும் காணப்பட்டது. இருந்த போதிலும், எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தினால் 10MW கழிவிலிருந்து – வலுப் பிறப்பாக்கல் ஆலை கெரவலபிட்டிய பகுதியில் இயக்கப்பட்டதுடன், இந்த நிலையத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தியிருந்தால், கொழும்பு மாவட்டம் மீண்டும் பாரிய கழிவு அகற்றல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, சமூக மற்றும் சூழல்சார் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும்.

நாணயப் பரிமாற்று வீதங்களின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக குழுமம் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. குழுமத்தின் இலாபகரத்தன்மையில், வட்டிசார் செலவீனங்களின் அதிகரிப்பால் பெருமளவு தாக்கம் ஏற்பட்டிருந்ததுடன், ஹோட்டல் துறை மற்றும் வலுப் பிறப்பாக்கல் துறை போன்ற மூலதன-உள்ளீட்டுப் பிரிவுகளில் எதிர்மறையான தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தன. இந்தப் பிரிவுகள் தமது உட்கட்டமைப்புகளுக்கு நிதிவசதிகளை ஏற்படுத்துவதற்கு அதிகளவு கடன் பெறுகையில் தங்கியுள்ளன.

எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதி தவிசாளருமான கலாநிதி. பராக்கிரம திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது தூர நோக்குடைய மற்றும் உள்ளடக்கங்களைக் கொண்ட தோற்றப்பாடு மற்றும் துல்லியமான தீர்மானமெடுத்தல்கள் போன்றவற்றினூடாக அந்நியச் செலாவணியில் வருமானமீட்டும் வியாபாரங்களில் தந்திரோபாய முதலீடுகளை மேற்கொள்ள முடிந்திருந்தது. சவால்கள் நிறைந்த ஆண்டில் இந்த நீண்ட கால நோக்கத்தைக் கொண்ட செயற்பாடு, மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததுடன், இந்த முதலீடுகளினூடாக, எமது குழுமத்தின் சகல வியாபாரப் பிரிவுகளிலும் தடங்கலில்லாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. வளர்ச்சி தொடர்பில் தளராத வழிமுறையை பின்பற்றி, குழுமத்துக்கு பொருத்தமான வகையில் சகல விரிவாக்கல் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை நாம் உறுதி செய்திருந்தோம். அத்துடன், தேசத்தின் சமூக-பொருளாதார அபிவிருத்தியில் நேர்த்தியாக பங்களிப்பு வழங்கும் வாய்ப்பையும் கொண்டிருந்ததை உறுதி செய்தோம்.” என்றார்.

 

2022-2023 நிதியாண்டில் பதிவாகியிருந்த இதர பிரதான முக்கிய அம்சங்கள்

சூரியப் படல் மின் உற்பத்தியாலையை கையகப்படுத்தியிருந்தமை, 10MW புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் திறனை, ரூ. 1.4 பில்லியன் முதலீட்டில் மேற்கொண்டிருந்தமை போன்றவற்றினூடாக, குழுமம் புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கலினூடாக, நாட்டின் உச்ச கட்ட மின்பாவனைத் தேவையின் 1.4% க்கும் அதிகமான மின்பிறப்பாக்கல் பங்களிப்பை வழங்குகின்றது.

கம்போடியாவில் சரக்கு கையாளல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இணைந்த செயற்பாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு, தனது புவியியல்சார் பிரசன்னத்தை மேலும் விரிவாக்கம் செய்திருந்தது.

ரூ. 1.6 பில்லியன் செலவில் 100,000 சதுர அடி சரக்குக் கொள்கலன் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையத்தினூடாக, தற்போது நிறுவனத்திடம் காணப்படும் சரக்கு கையாளல் திறன் மேலும் விஸ்தரிக்கப்படும்.

நிதியாண்டில் ‘Freedom to be me’ எனும் தொனிப்பொருளின் கீழ் ‘Diversity, Equity & Inclusion (DE&I)’ என்பது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் அங்கமாக, பெற்றோருக்கான விடுமுறை மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், குழந்தைப் பேறு விடுமுறை 100 தினங்களாக அதிகரிக்கப்பட்டதுடன், தந்தைக்கான விடுமுறையும் அறிமுகம் செய்யப்பட்டது.

SpenceInnova போன்ற புத்தாக்கம் மற்றும் ஆக்கத்திறன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது திறனை வெளிப்படுத்தும் கலாசாரம் ஸ்பென்சோனியர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு வியாபார செயற்பாடுகளில் இந்த சிந்தனைகள் வெற்றிகரமாக உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2022 மே மாதத்தில் UN Global Compact இல் தன்னார்வ ஈடுபாட்டின் 20 வருட பூர்த்தி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

Science Based Targets initiative (SBTi) இன் ஒப்பமிட்டவர்களாக, 2030 ஆம் ஆண்டளவில், பூஜ்ஜிய வாயு கசிவுகளை கொண்டிருப்பதற்கான பொது உறுதிமொழியை மேற்கொண்டிருந்தது.  காலநிலை மாற்றம் மற்றும் செயற்பாடுகளில் நிலைபேறான செயற்பாடுகளை உள்வாங்கல் போன்றவற்றில் குழுமத்தின் உறுதியான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

1983 ஆம் ஆண்டு முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள எயிட்கன் ஸ்பென்ஸ், 150 வருடங்களுக்கு மேலான பாரம்பரிய சிறப்புடன் இயங்குகின்றது. 13000 க்கும் அதிகமான ஊழிய அங்கத்தவர்களால், 16 தொழிற்துறைகளில், 9 நாடுகளில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. அந்நாடுகளில், இலங்கை, மாலைதீவுகள், ஃபிஜி, இந்தியா, ஓமான், மியன்மார், மொசாம்பிக், பங்களாதேஷ் மற்றும் கம்போடியா ஆகியன அடங்குகின்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Fems H.E.R. மையத்தினால் இலங்கையின் பெண்களுக்கு...

2023-09-18 19:45:01
news-image

இலங்கையில் அதிகம் விரும்பப்படும் மிகச்சிறந்த 10...

2023-09-12 10:07:55
news-image

புதிய வளாகத்துடன் கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை...

2023-09-11 16:36:47
news-image

மக்கள் வங்கி 2 மில்லியனுக்கும் அதிகமான...

2023-09-11 16:43:37
news-image

"லிபேரா ஜூனியர்" பிரமாண்டமான வெளியீட்டு விழா

2023-09-11 11:20:19
news-image

சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள்...

2023-09-04 12:21:42
news-image

தரத்திற்கான அங்கீகாரம் : IDL இன்...

2023-08-31 20:07:15
news-image

ரூபா 9.4 பில்லியன் தொகையை வரிக்கு...

2023-08-31 16:56:39
news-image

யாழ்ப்பாணத்தின் அழகை உலகுக்கு எடுத்துச் செல்லும்...

2023-08-31 21:54:09
news-image

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவோம் :...

2023-08-25 15:40:33
news-image

இலங்கை காப்புறுதியாளர்கள் சங்கத்தின் இரத்த தானம்

2023-08-25 11:13:04
news-image

மக்கள் வங்கி, சர்வதேச இளைஞர் தினத்தில்...

2023-08-24 21:20:43