உலகக் கிண்ண தகுதிகாண் இலங்கை குழாத்தில் மெத்யூஸ் இல்லை

Published By: Vishnu

08 Jun, 2023 | 08:15 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு 15 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தகுதிகாண் சுற்றை முன்னிட்டு இலங்கை அணியைப் பலப்படுத்தும் பொருட்டு சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டிருந்ததனர்.

அவர்களில் திமுத் கருணாரட்ன 2 அரைச் சதங்களைக் குவித்து துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்தி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான குழாத்தில் இடம்பிடித்துக்கொண்டார்.

ஆனால், ஏஞ்சலோ மெத்யூஸ், துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடிக்கத் தவறினார்.

அதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு எதிரான  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மெத்யூஸினால் பிரகாசிக்க முடியாமல் போனது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானுடனான 2ஆவது போட்டியில் மெத்யூஸுக்குப் பதிலாக இணைக்கப்பட்ட சதீர சமரவிக்ரம திறமையாகத் துடுப்பெடுத்தாடியதன் மூலம் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான குழாத்தில் இடம்பிடித்துக்கொண்டார்.

உபாதைகளிலிருந்த மீண்டுவந்து ஆப்கானிஸ்தானுடனான தொடரில் பந்துவீச்சில் அசத்திய துஷ்மன்த சமீர, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

அதிரடி ஆரம்ப வீரரும் விக்கெட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேரா உபாதையிலிருந்து இன்னும் மீளாத காரணத்தால் அவரைப் பற்றி தேர்வாளர்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆப்கானிஸ்தானுடனான தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் அறிமுகமான மதீஷ பத்திரண, துஷான் ஹேமன்த ஆகியோருக்கும் இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இல்ஙகை அணியினர் சனிக்கிழமை (10) இங்கிருந்து ஸிம்பாப்வே நோக்கி பயணமாகவுள்ளனர்.

தகுதிகாண் சுற்று 

இரண்டு குழுக்களில் 10 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.

அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுடன் பி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 19ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து ஒமானை 23ஆம் திகதியும், அயர்லாந்தை 25ஆம் திகதியும் ஸ்கொட்லாந்தை 27ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

ஏ குழுவில் முதலாவது உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம். ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன.

இந்த இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 6 சுற்றில் விளையாடும். ஒரு குழுவிலுள்ள அணிகள் மற்றைய குழுவிலுள்ள அணிகளையே சுப்பர் 6 சுற்றில் எதிர்த்தாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண பிரதான சுற்றில் விளையாட தகுதிபெறும்.

இலங்கை குழாம்

தசுன் ஷானக்க (தலைவர்), குசல் மெண்டிஸ் (உதவி அணித் தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, சதிர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமன்த, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண, லஹிரு குமார, கசுன் ராஜித்த. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனை ஒன்றை...

2024-09-19 17:08:04
news-image

தகாத நடத்தையில் ஈடுபட்டார் - இலங்கை...

2024-09-19 12:56:32
news-image

தென் ஆபிரிக்காவை சர்வதேச கிரிக்கெட்டில் முதல்...

2024-09-19 10:30:39
news-image

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்...

2024-09-19 10:11:26
news-image

கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது,...

2024-09-18 18:22:18
news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53
news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14