தமிழ் மக்கள் சட்டம், ஒழுங்கு மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள் : சட்டவாட்சி கோட்பாட்டை அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும் - தேசிய மக்கள் சக்தி

Published By: Vishnu

08 Jun, 2023 | 08:11 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படும் போது தமிழ் மக்கள் சட்டம், ஒழுங்கு மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்.

பொருளாதார மீட்சிக்கு முன்னர் முதலில் சட்டவாட்சி கோட்பாட்டை அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டும்  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின்  கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார கொள்கைக்கு அமையவே வரி கொள்கை வகுக்கப்பட வேண்டும்.வரி அறவிடல் ஊடாக சமூக நலனை பேண முடியாது என்பது தற்போது உண்மையாகியுள்ளது.சுகாதாரம், இலவச கல்வி ஆகிய சேவைத்துறைகளுக்கு வரி அத்தியாவசியமானது.

நாட்டில் உள்ள பிள்ளைகள் இலவச கல்வியின் உச்ச பயனை பெறுகிறார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

 நாட்டில் இலவச கல்வி என்பது மிகுதியாகியுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது.கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் 40 சதவீதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

செலவுகளை வரையறுக்கும் போது இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்துக்கு அரசாங்கம் வழங்கும் நிலை கேள்விக்குரியது.

அரச பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் இல்லை தனியார் வகுப்புகள் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுகிறார்கள்.

தனியார் வகுப்புகளுக்காக பெற்றோர் பாரிய நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது.இதுவே உண்மை.முறையற்ற வள பற்றாக்குறையால் அரச பாடசாலை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.அரசாங்கம் கட்டம் கட்டமாக  இலவச கல்வி என்பதில் இருந்து விலகுகிறது.

அறவிடப்படும் வரி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது. வரி கொள்கை வகைப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதும் இல்லை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது பல்வேறு வழிமுறையில் வரி அறவிடப்படுகிறது.

வரி கொள்கையை சிறந்த முறையில் செயற்படுத்துவதுடன்,சட்டத்தையும் சிறந்த முறையில் பொதுவான தன்டையுடன் செயற்படுத்த வேண்டும்.

அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படுபவர்களுக்கு ஒரு சட்டம்,எதிராக செயற்படுபவர்களுக்கு பிறிதொரு சட்டம் செயற்படுத்தப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. 

இருப்பினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன.இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம்,ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்ளுவார்கள் ..இது பாரதூரமான பிரச்சினை.

குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும்.பாராளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம்.ஆளும் தரப்புக்கு ஒரு சலுகை  எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகை அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது.தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்பதால் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47