நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் 14 வயதான சிறுவனே உயிரிழந்தவராவார்.
தாயாரும் தந்தையாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் வியாழக்கிழமை (8) காலை தூக்கிட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனை உடனடியாக மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM