மாரடைப்பால் மரணமடைந்த 41 வயது இதய மருத்துவர்! அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!

08 Jun, 2023 | 04:42 PM
image

அவர் கிரிக்கெட் ஆடுவார்; தொடர்ந்து உடற்பயிற்சிக் கூடம் செல்வார். சுறுசுறுப்பான வாழ்க்கையையே வாழ்ந்துவந்தார். இருப்பினும் 41 வயதில் அவருக்கு எப்படி மாரடைப்பு வந்து உயிரிழந்தார் என எல்லோரும் வருத்தத்துடன் பேசுகிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் பிரபல இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் ஜாம் நகரைச் சேர்ந்த கவுரவ் காந்தி. சுமார் 12 ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் செய்துவரும் இவர் 16,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்தவர்.

கடந்த திங்கள் கிழமை வழக்கம்போல் நோயாளிகளைப் பார்த்துவிட்டு இரவு வீடு திருப்பினார் கவுரவ் காந்தி. இரவு உணவுக்குப் பின் படுத்தவருக்கு இரவு நள்ளிரவில் மார்பில் சற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவர் தான் பணிபுரியும் ஷாரதா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டது. அதில் எந்த மாறுதலும் இல்லை. எனவே அவர் தனக்கு வயிற்றில் அமிலச்சுரப்பால் ஏற்பட்ட பிரச்னை எனக் கருதி, ஒரு ஊசி எடுத்துக்கொண்டார். அங்கேயே அரை மணி நேரம் காத்திருந்து வேறு எந்தபிரச்னையும் இல்லாத நிலையில் வீடு திரும்பிவிட்டார். ஆனால் காலை ஆறு மணி அளவில் அவரது உறவினர்கள் அவரை குளியலறையில் மயக்க நிலையில் கண்டனர்.  உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் உயிரிழந்துவிட்டார்.

ஈசிஜி எடுத்து பிரச்னை ஒன்றும் இல்லை என்று காட்டிய நிலையில் அதை நம்பி வீடு திரும்பியவருக்கு இந்த நிலை.

இதய அறுவை சிகிச்சை மூலம் ஆயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்றிய மருத்துவரே மிக இளம் வயதில் பலியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர்.

“இறந்த சகோதரர்  தினசரி 14 மணிநேரங்கள் உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபட்டுத்திக் கொண்டு தொடர்ந்து மன அழுத்தமான வேலையைச் செய்தது அவரது இறப்புக்கு காரணமாக இருக்கக்கூடும்

அதுவன்றி வேறு தீங்கிழைக்கும் பழக்க வழக்கங்கள் அவருக்கு இல்லை என்று தெரிகிறது

அவரைப் போன்றே அத்தனை மணிநேரங்கள் மன அழுத்தமான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய தொழில் முனைவோர் இங்கு உண்டு.  தொடர் மன அழுத்தம்

இதயத்துக்கு ஊறு செய்யும்  என்பதை நாம் அறிந்து தெளிய வேண்டும் சொந்தங்களே.  உன் இதயத்தின் தசை தன் இசையை நிறுத்திக் கொண்டாலும் பல்லாயிரம் பேரின் இதயத்துடிப்பெனும் இசையில் நீ வாழ்வாய் சகோதரா... “ என சிவகங்கையைச் சேர்ந்த மருத்துவர் பரூக் அப்துல்லா முகநூலில், மருத்துவர் காந்தி மரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13