(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்க நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி நிதி அமைச்சராகவே தலையிட்டார். அரசாங்க நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட்டது என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்ற அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஸ்மன் கிரியெல்ல வியாழக்கிழமை (8) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி,கூறுகையில், நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக கூறி வருகின்றோம். இறுதியாக, ஜனாதிபதி வந்து ஹர்ஷ டி சில்வாவை நியமனம் செய்தார்.
இதன்மூலம் சபாநாயகரிடமிருந்து எங்களுக்கு ஏதாவது செய்ய முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நிதிக் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு சொந்தமானது. அது கொடுக்கப்படவில்லை. போராட்ட காலத்தின் போது கொஞ்சம் கொடுக்கப்பட்டது. பின்னர் திரும்ப எடுக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை காக்க வேண்டியவர் நீங்கள். அரசின் பக்கம் இல்லாமல் எங்கள் பக்கம் இருங்கள் எனறார்.
இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில் நான் யாருடைய பக்கமும் நிற்கவில்லை. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவெடுக்க வேண்டும் என்றார்
மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சபாநாயகரே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும். ஆளும் கட்சிக்கு அடிபணிந்து நீங்கள் இதனை எமக்கு வழங்கவில்லை. பாராளுமன்றத்தில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சென்று சொல்லுங்கள் என்பதுபோலே தற்போது இடம்பெற்றிருக்கிறது என்றார்.
இதன்போது எழுந்த அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க , எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தவறான விளக்கம் அளித்துள்ளார். ஹர்ஷ டி சில்வாவை வாழ்த்துகிறோம். இந்த விடயத்தில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காப்பாற்றப்பட்டது.
நிதிக் குழுவின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு உண்டு. நாங்கள் அனைவரும் தெரிவுக் குழுவில் அமர்ந்துள்ளோம். இதை எதிர் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறமாட்டோம்.
இங்கு கூறப்படும் சதியை உருவாக்கியது எதிர்க்கட்சிதான். இதனை பாராளுமன்றக் குழுக்களில் 8 குழுக்களுக்கு தலைமை பதவிகளும் அவர்களுக்கே வழங்கப்பட்டன . அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு பயணத்தை மேற்கொள்ள ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஆனால் இங்கு ஜனாதிபதி நிதி அமைச்சராகவே தலையிட்டார் ஜனாதிபதியாக அல்ல தற்போது நிதிக்குழுவுக்கு ஹர்ஷடி சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தனது கடமையை முறையாக செய்வதை தடுப்பதற்கே தற்போது இந்த பிச்சினையை இவர்கள் எழுப்புகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM