நடிகர் கிஷன் தாஸ் மற்றும் நடிகை ஸ்மிருதி வெங்கட் காதலர்களாக நடிக்கும் 'தருணம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் 'தருணம்' படத்தின் பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது.
'தேஜாவு' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தருணம்'.
இதில் 'முதல் நீ முடிவும் நீ' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் கிஷன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நட்சத்திர நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். காதலின் முக்கியமான தருணங்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் A, ஈடன் தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' தேஜாவு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு மிஸ்டரி திரில்லர் திரைப்படத்தை இயக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.
பல கதைகளை விவாதித்த பிறகு, இந்த கதையைப் பற்றி என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான புகழிடம் கூறினேன். அவர்தான் இது நிச்சயமாக வெற்றி பெறும் என கூறினார்.
இந்த படத்தின் திரைக்கதை அனைவரையும் கவரும். தருணம் என்றால் காதலில் ஒவ்வொரு தருணமும் சுவராசியமானது தான். அதனால் படத்திற்கு 'தருணம்' என தலைப்பிட்டிருக்கிறேன்.'' என்றார்.
பிரத்யேக காணொளியில் நடிகர் கிஷன் தாசும், நடிகை ஸ்மிருதி வெங்கட்டும் உதட்டுடன் உதடு பொருத்தி, முத்தம் கொடுக்கும் காட்சியும், தருணமும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM