ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Ponmalar

08 Jun, 2023 | 03:23 PM
image

நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரரான எம். எஸ். தோனி அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'எல் ஜி எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) .

இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விகாஸ் ஹசிஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சாக்ஷி தோனியின் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில், காதலும்.. குறும்பும்.. இளமையும்... குடும்பப் பின்னணியும் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக...

2024-03-19 01:03:23
news-image

'கங்கணம்' கட்டி பழிவாங்கும் மூவரணி

2024-03-18 17:50:19
news-image

சாதனை படைத்த அஜித் குமாரின் 'குட்...

2024-03-18 17:50:43
news-image

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

2024-03-18 15:23:40
news-image

வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவுண்டமணியின் 'ஒத்த...

2024-03-18 15:22:57
news-image

'மக்கள் படைப்பாளி' சீனு ராமசாமி வெளியிட்ட...

2024-03-16 15:56:52
news-image

ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ்...

2024-03-16 17:50:12
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-16 14:47:30
news-image

அமீகோ கரேஜ் - விமர்சனம்

2024-03-16 14:47:44
news-image

ஆண்களை டார்ச்சர் செய்வதில் சிறந்தவர்கள் காதலியா?...

2024-03-16 14:39:49
news-image

காடுவெட்டி - விமர்சனம்

2024-03-16 14:39:07
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'எனக்குத் தொழில்...

2024-03-16 14:48:39