ஆசிரியர் சேவைக்கு தெரிவு செய்யப்படுவோரின் வெளிமாகாணங்களுக்கான நியமனம் குறித்து கல்வி அமைச்சரின் விளக்கம்

Published By: Vishnu

08 Jun, 2023 | 05:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்திலிருந்து ஆசிரியர் சேவைக்கு தெரிவு செய்யப்படுவோர் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

இது சிக்கலானதுதான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான  கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீதரன் எம்.பி. தனது கேள்வியில், ஆசிரியர் கலாசாலைகள்,கல்வியியல் கல்லூரிகளிலிருந்து மெரீட் ,மாவட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் வெளிமாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு வழங்கப்படும் 37000 ரூபா சம்பளத்தில் வெளிமாகாண  பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் இவர்களினால் போக்குவரத்து, தங்குமிட வாடகை, உணவுச் செலவு  போன்றவற்றை எப்படி சமாளிக்க முடியும்? எனவே அவர்களை வடக்கு மாகாணத்திலேயே நியமிக்க முடியாதா என கேட்கிறேன் என்றார்.

இதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பதிலளிக்கையில், 2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8000 பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். 

கொரோனா நெருக்கடியினால் ஆசிரியர் நியமனங்கள் தாமதமான நிலையில்  விரைவில் இவர்களில்  7500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளோம்.

இவர்களுக்கான நியமனங்களை வர்த்தமானி அறிவித்தலில் அடிப்படையிலேயே வழங்க வேண்டியுள்ளது. அதனால்தான் ஒரு மாகாணத்தில்  உள்ளவர்கள் இன்னொரு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்றனர்.

இது சிக்கலானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. எனினும் நான் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35