லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல், அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
எல்டராடோ தோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கன்னி மாரியம்மன் பத்தினி ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 தாலிகள், தாலிபொட்டுகள், கண் மலர்கள், உண்டியல், DVD player என்பன களவாடப்பட்டுள்ளன என்று லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, லுணுகலை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தாலி, தாலி பொட்டு மற்றும் உண்டியல் என்பனவும் களவாடப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். லுணுகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM