(எம்.மனோசித்ரா)
ஒப்பந்தங்களின் நிபந்தனைகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து அவர்களுக்கெதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் அதிகாரிகளுடன் புதன்கிழமை (7) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1050 எரிபொருள் நிலையங்களில் 432 எரிபொருள் நிலையங்கள் மாத்திரமே கடந்த வாரம் சகல எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.
255 எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எந்தவொரு எரிபொருளிலும் குறைந்த பட்ச இருப்பை பேணத் தவறியுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.
அதேவேளை 363 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏதேனும் ஒரு எரிபொருள் இருப்பு மாத்திரமே பேணப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு ஒப்பந்தங்களுக்கு முரணாக செயற்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 18 மாதங்களுக்கான எரிபொருள் களஞ்சிய திட்டம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பு , போக்குவரத்து பவுசர்களுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவை தொடர்பிலும் இதன் போது மீளாய்வு செய்யப்படதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM