(நெவில் அன்தனி)
எமது பயணம், எமது நம்பிக்கை என்ற கருப்பொருளில் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150ஆவது ஆண்டு விழா அணிக்கு அறுவர் கிரிக்கெட் போட்டியுடன் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
ஜூன் 10ஆம், 11ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 16 பிரபல கழக அணிகளும் 4 மகளிர் அணிகளும் பங்குபற்றும் என கோல்ட் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் நிஷான்த ரணதுங்க தெரிவித்தார்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
இக் கழகத்தின் 150 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட விழா தொடர்பாக விளக்கும் ஊடக சந்திப்பு கழக கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் போஷகர் ட்ரவோ ராஜரட்னம், முன்னாள் இலங்கை வீரர் சமிந்த வாஸ், கழக செயலாளர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, கௌரவ பொருளாளர் எம். ரட்னாகரன், கழக தவிசாளர் தினேஷ் விக்ரமசிங்க, கழகத்தின் உதவித் தலைவர் சமிந்த மெண்டிஸ், சமூகவியல் செயலாளர் சமிந்த ரத்நாயக்க உட்பட கழக நிறைவேற்ற அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்து பேசிய நிஷான்த ரணதுங்க, 'எமது கழகத்தின் 150ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக கழகம் சார்பாக விளையாடிய மிகச் சிறந்த வீரர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் கிரிக்கெட் விற்பன்னர்கள் இரவு எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெறும்.
இந்த நிகழ்வின்போது கிரிக்கெட் விற்பன்னர்களுடன் இரசிகர்களும் ஆதரவாளர்களும் நேரடியாக கலந்துரையாடி அவர்களது கிரிக்கெட் வரலாறுகள் பற்றி அறிந்துகொள்ள முடியும். அன்றைய தினம் கழகத்தின் 150 வருட வெற்றிப்பயணம் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரலாற்று சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படும்' என்றார்.
இதனிடையே பிலியர்ட்ஸ் போட்டி கழக மண்டபத்தில் ஜூலை 21ஆம் திகதியும் 29ஆம் திகதியும் நடத்தப்படுவதுடன் ஹொக்கி சுற்றுப் போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் ஆகஸ்ட் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடத்தப்படும்.
விசேட விருந்தாளிகள், கழக உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் சமகால வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இரவு விருந்துபசாரம் அக்டோபர் 21ஆம் திகதி நடத்தப்பட்டு 150ஆவது ஆண்டு விழா நிறைவடையும்.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 1873ஆம் ஆண்டு டாம் வீதியில் ஸ்தாபிக்கப்பட்டது. அக் காலப்பகுதியில் மரங்கள் சூழ்ந்த மைதானத்திலேயே கொல்ட்ஸ் கழக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன. கழகத்தின் முதலாவது தலைவராக ஆங்கிலேயரான வில்ப்ரட் வென் விக் பதவி வகித்தார்.
சுமார் 80 வருடங்களாகவே தற்போது அமைந்துள்ள ஹெவ்லொக் பார்க்கில் புதிய கட்டடங்களுடன் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இயங்கிவருகிறது.
இக் கழகத்தின் போஷகர்களாக இலங்கையின் தேசாதிபதியும் முதலாவது ஜனாதிபதியுமான வில்லியம் கோப்பல்லாவ, முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன, ரஞ்சித் சமரசேகர ஆகியோர் செயற்பட்டதுடன் சமகால போஷகராக ட்ரவோ ராஜரட்டனம் செயற்படுகிறார். அவர்களுடன் முன்னாள் தலைவர் கே. மதிவாணன் கழகத்தின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, டிட்டா நதெனியல்ஸ், டெரல் லீவர்ஸ், ரஞ்சித் சமரசேகர, பேர்னார்ட் ருலாச், ரோய் டயஸ், ரொமேஷ் களுவித்தாரண, சமிந்த வாஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், டுலீப் சமரவீர, திசர பெரேரா போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை சாரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM